இந்தியா

வேலைவாய்ப்பின்மையில் தமிழ்நாடு மிகமோசம் : இந்திய சராசரியை விட அதிகரித்த அவலம்! - இதுதான் முன்னேற்றமா?

வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலைவாய்ப்பின்மையில் தமிழ்நாடு மிகமோசம் : இந்திய சராசரியை விட அதிகரித்த அவலம்! - இதுதான் முன்னேற்றமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சுனில்குமார் இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.

அதில், நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் துறையில் வேலைவாய்ப்பை உருவாக்குவது தொடர்பான சாத்தியக்கூறுகள் குறித்து மத்திய அரசு எந்த மதிப்பீடும் செய்யவில்லை என்று கூறினார். மேலும், இதுதொடர்பான கணக்கெடுப்பும் மத்திய அரசு நடத்தவில்லை என்றும் சுனில்குமார் தெரிவித்தார்.

வேலைவாய்ப்பின்மையில் தமிழ்நாடு மிகமோசம் : இந்திய சராசரியை விட அதிகரித்த அவலம்! - இதுதான் முன்னேற்றமா?

வேலையில்லாதவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவது குறித்து எந்த காலக்கெடுவும் விதிக்கவில்லை. தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மை 7.6 சதவிகிதமாக இருப்பதாகவும், இது தேசிய சராசரி அளவான 6.1 சதவிகிதத்தைக் காட்டிலும் அதிகம் என்றும் மத்திய அமைச்சர் சுனில்குமார் குறிப்பிட்டார்.

கடந்த 7 ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டும் 5.3 சதவிகிதமாக வேலைவாய்ப்பின்மை உயர்ந்துள்ளது. ஆனால், கடந்த 2011-12ஆம் நிதியாண்டில் 2.3 சதவிகிதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை 2017 - 18ஆம் நிதியாண்டில் 7.6 சதவிகிதமாக உயர்ந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories