இந்தியா

கடந்தாண்டை விட ரூ.9,500 கோடி குறைப்பு : விவசாயிகளின் 100 நாள் வேலைத் திட்டத்தை இழுத்து மூடும் மோடி அரசு!

கிராமப்புற விவசாயிகளுக்கு பயனளித்துவந்த 100 நாட்கள் வேலைத் திட்டத்திற்கு ஒதுக்கிய நிதியை 9,500 கோடி ரூபாயை குறைத்து மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

கடந்தாண்டை விட ரூ.9,500 கோடி குறைப்பு : விவசாயிகளின் 100 நாள் வேலைத் திட்டத்தை இழுத்து மூடும் மோடி அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கிராமப்புற வறுமையை ஒழிக்கும் வகையில், நூறு நாள் வேலை திட்டத்தின் (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்) மூலமாகதான் இந்தியாவில் வறட்சியில் தவித்து வந்த விவசாயிகள் மற்றும் விவசாய கூலித் தொழிலாளர்கள் ஓரளவு தங்கள் வறுமையை போக்கிக்கொள்ள முடிந்தது.

வறட்சி காலத்தில் வறண்ட நீர்நிலைப் பகுதிகளை தூர்வாருதல் போன்ற பணிகளால் அவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது அந்த திட்டத்தை பா.ஜ.க இழுத்து மூடும் வேலையில் இறங்கியுள்ளது.

குறிப்பாக 100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டத்துக்கான நிதியை 2020-21ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் 9,500 கோடி ரூபாயை குறைத்துள்ளது. கடந்த பட்ஜெட்டில் 2019-ல் 100 நாள் வேலைத் திட்டத்திற்காக 71 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

கடந்தாண்டை விட ரூ.9,500 கோடி குறைப்பு : விவசாயிகளின் 100 நாள் வேலைத் திட்டத்தை இழுத்து மூடும் மோடி அரசு!

ஆனால் தற்போது மத்திய நிதியமைச்சர் வெளியிட்ட நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் 13 சதவீதம் குறைக்கப்பட்டு ரூ.61,500 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது 9,500 கோடி ரூபாயை குறைத்துள்ளது.

முன்னதாக இந்தத் திட்டத்திற்கு உரிய முக்கியத்துவம் அளிக்காததன் விளைவு, 2019-20 நிதியாண்டில், நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு பெற்ற மக்களின் எண்ணிக்கையிலும், வேலைநாட்களிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றும், கிராமப்புற பொருளாதாரம் மிகவும் மோசமடைந்துள்ளது என்று எச்சரிக்கை விடுத்தனர்.

ஆனால் அதனைக் காதில் வாங்கிக்கொள்ளாத மோடி அரசு நிதியை குறைத்து அந்த திட்டத்திற்கு குழித்தொண்டும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்தள்ளனர்.

கடந்தாண்டை விட ரூ.9,500 கோடி குறைப்பு : விவசாயிகளின் 100 நாள் வேலைத் திட்டத்தை இழுத்து மூடும் மோடி அரசு!

மேலும் கடந்தாண்டு ஒதுக்கப்பட்ட நிதியே பற்றாமல் 15 மாநிலங்களில் பணிகள் தேங்கிக்கிடந்தது. கிராமப்புற விவசாய மக்களிடம் வாங்கும் சக்தி அதிகரிக்க வேண்டும் என்றால் அவர்களிடன் பணம் இருக்க வேண்டும். அதற்காக வேலை அமைத்து தரவேண்டும்.

அதுமட்டுமின்றி, பி.எல்.எப்.எஸ் அறிக்கையின்படி 2017-18 ஆம் ஆண்டில் கிராமப்புற வேலையின்மை 8 சதவீதம் அதிகரித்துள்ளது. இது 45 ஆண்டுகளில் இல்லாத மோசமானதாகும். இதை ஈடுசெய்ய இந்த பட்ஜெட் நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும். ஆனால் அதில் நடவடிக்கை இல்லை என்பது வேதனைக்குறிய விசயமாகும் என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories