இந்தியா

விவசாயத்தை மேம்படுத்த இந்த பட்ஜெட்டில் என்ன இருக்கிறது? #Budget2020

விவசாயத்துறைக்கு பட்ஜெட்டில் 2.83 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, விவசாயத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்களை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

விவசாயத்தை மேம்படுத்த இந்த பட்ஜெட்டில் என்ன இருக்கிறது? #Budget2020
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

2020 - 2021 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.

பட்ஜெட் உரையை வாசிக்கட் தொடங்கிய நிர்மலா சீதாராமன், "துடிப்பான, புதிய பொருளாதாரத்துக்கான வழிவகைகளை உருவாக்க விரும்புகிறேன். மக்களின் வருமானத்தை உயர்த்தும் பட்ஜெட்டாக இது இருக்கும்." எனத் தெரிவித்தார்.

மேலும், விவசாயம் குறித்துப் பேசிய நிர்மலா சீதாராமன் ஆத்திச்சூடியை மேற்கோள் காட்டினார். ‘பூமி திருத்தி உண்’ என்ற ஆத்திச்சூடியைக் குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன், விளைநிலத்தை உழுது அதில் பயிர்செய்து உண் என்ற அதன் விளக்கத்தையும் குறிப்பிட்டார்.

விவசாயத்தை மேம்படுத்த இந்த பட்ஜெட்டில் என்ன இருக்கிறது? #Budget2020

விவசாயத்துறைக்கு பட்ஜெட்டில் 2.83 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். விவசாயத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்களாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தவை பின்வருமாறு :

* 20 லட்சம் விவசாயிகளுக்கு சூரிய ஓளியில் மின்சாரம் தயாரிக்கும் இயந்திரம் அமைக்க நிதியுதவி வழங்கப்படும்.

*விதைகளை சேமித்து விநியோகிக்கும் தான்யலட்சுமி என்ற திட்டத்தில் கிராமப்புற பெண்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.

*தண்ணீர் பற்றாக்குறை உள்ள 100 மாவட்டங்களில் தனிக்கவனம் செலுத்தப்படும்.

விவசாயத்தை மேம்படுத்த இந்த பட்ஜெட்டில் என்ன இருக்கிறது? #Budget2020

*20 லட்சம் விவசாயிகள் சோலார் பமபுகள் அமைக்க உதவி செய்யப்படும்.

*அனைத்து வகையான உரங்களையும் சமமாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

*வேளாண் சந்தை தாராளமயமாக்கப்படும்.

*விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க அரசு தீவிரமாக உள்ளது.

* மாவட்ட வாரியாக தோட்டகலைத்துறை பொருட்கள் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

* ரசாயன உரங்கள் அதிகளவில் பயன்படுத்துவதை கட்டுப்படுத்கப்படும்.

* விவசாயிகளுக்கு 15 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

*பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் 6.11 கோடி விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர்.

* விவசாய விளைபொருட்கள் கொண்டு செல்லும் செலவை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

*பண்ணை தொழிலை தனியார் நிறுவனங்களைக் கொண்டு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆகிய திட்டங்களை அறிவித்தார்.

banner

Related Stories

Related Stories