இந்தியா

ஆழமான சதிவலைகளால் அரசியலமைப்பு பின்னப்படுகிறது : சோனியா காந்தி எச்சரிக்கை!

இந்திய அரசியல் சட்டத்தை சீர்குலைப்பதற்காக மிக ஆழமான சதிவலைகள் பின்னப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

ஆழமான சதிவலைகளால் அரசியலமைப்பு பின்னப்படுகிறது : சோனியா காந்தி எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார் சோனியா காந்தி. அதில், “தனிப்பட்ட பாரபட்சங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, நாட்டின் அரசியல் அமைப்பையும், அதன் மாண்புகளையும் காக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும். தற்போதைய ஆட்சியில் அரசியல் சட்டம் அளித்துள்ள உரிமைகள் பாதுகாப்பாக இல்லை என்ற எண்ணம் மக்களிடையே அதிகரித்து வருகிறது.

இதனை காப்பாற்ற வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு என்றும் தெரிவித்துள்ளார். மக்களிடையே, இன, மத, பிராந்திய அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்தி, அரசியல் சட்டத்தை சீர்குலைப்பதற்காக மிக ஆழமான சதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை செயல்படுத்த, நாட்டின் அனைத்து அரசியல் சாசன அமைப்புகளும் சீரழிக்கப்பட்டு வருகிறது.

பொருளாதார சீர்குலைவுகள், நிர்வாகக் கோளாறுகள், ஏற்றுக் கொள்ள முடியாதாக அளவுக்கான வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற அரசின் தோல்விகளில் இருந்து மக்களை திசைதிருப்பும் நடவடிக்கைகளே இவை” என்று சோனியா காந்தி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளார்.

banner

Related Stories

Related Stories