இந்தியா

“இந்தியாவுக்கு பிரதமர் மோடியால் ஆபத்து” : லண்டனின் The Economist இதழ் கடும் விமர்சனம்!

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்திற்கு பிரதமர் மோடியால் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக லண்டனில் இருந்து வெளியாகும் The Economist இதழ் முகப்புக் கட்டுரை வெளியிட்டுள்ளது.

“இந்தியாவுக்கு பிரதமர் மோடியால் ஆபத்து” : லண்டனின் The Economist இதழ் கடும் விமர்சனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

"சகிப்புத்தன்மையற்ற இந்தியா" என்ற தலைப்பில் முகப்புக் கட்டுரை வெளியிட்டுள்ளது The Economist இதழ். அதில், குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட பிரதமர் மோடி தலைமையிலான அரசின் நடவடிக்கைகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் வகையில், பிரதமர் மோடியும், அவரது கட்சியும், உலகின் மிகப் பெரிய ஜனநாகயக நாட்டிற்கு ஆபத்தை ஏற்படுத்தி வருவதாகவும், இந்தியாவை இந்து நாடாக மாற்ற பிரதமர் மோடி முயல்வதாக இந்தியாவின் 20 கோடி இஸ்லாமியர்கள் அச்சமடைந்துள்ளனர் என்றும் அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தனது நடவடிக்கைகள் மூலம் அரசியல் அமைப்புச் சட்டத்தின் மதசார்பற்ற கோட்பாடுகளை சீரழிப்பதாகவும், இதனால், இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் பல பத்தாண்டுகளுக்கு நீடிக்கும் என்றும் The Economist விமர்சித்துள்ளது.

பல இஸ்லாமியர்களை படுகொலை செய்த பசுப்பாதுகாவலர்களுக்கு ஊக்கம், இணைய சேவை தடை, முறையற்ற கைதுகள், ஊரடங்கு உத்தரவு என காஷ்மீர் மக்களை தண்டிக்கும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் The Economist குற்றம்சாட்டி உள்ளது.

மக்களிடையே, மத ரீதியில் பிளவை ஏற்படுத்தி, பா.ஜ.க.வுக்கு அரசியல் ஆதாயம் தேட பிரதமர் மோடி முயற்சிப்பதாகவும் The Economist கடுமையாக விமர்சித்துள்ளது.

banner

Related Stories

Related Stories