இந்தியா

CAA ஆதரவு பேரணி என்கிற பெயரில் வெறியாட்டம் : வட இந்தியாவில் வேலையைக் காட்டும் பா.ஜ.க

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக ஜார்கண்டில் விஷ்வ இந்து பரிஷித் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

CAA ஆதரவு பேரணி என்கிற பெயரில் வெறியாட்டம் : வட இந்தியாவில் வேலையைக் காட்டும் பா.ஜ.க
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மத்தியில் ஆட்சி செய்யும் மோடி அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்தள்ளது. மோடி அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் குடியுரிமைச் சட்டத்திற்கு ஆதரவாக, ஆங்காங்கே சில இடங்களில் பா.ஜ.கவினர் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும், இத்துத்வா அமைப்புகளும் ஆர்ப்பாட்டம் பேரணி நடத்தி வருகின்றனர்.

அதன்படி குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக ஜார்கண்டின் லோகர்தாகா பகுதியில் விஷ்வ இந்து பரிஷித் அமைப்பினர் பேரணியில் ஈடுபட்டனர். பேரணியின் போது திடீரென ஏற்பட்ட சலசலப்பு பெரும் வன்முறையாக மாறியது.

இந்த வன்முறை சம்பவத்தின் போது லோகர்தாகா பகுதியில் இருந்த வீடுகள் சூறையாடப்பட்டனர். சாலையோர வாகனங்களுக்கு தீயிட்டு கொளுத்தப்பட்டது. இதனையடுத்து வன்முறையில் ஈடுபட்ட சிலரை கைது செய்துள்ளனர்.

இதையடுத்து லோகர்தாகா பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் ஏற்பட்ட வன்முறை தொடர்பான விசாரித்து வருவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories