இந்தியா

மனைவியிடம் ஆபாச பேச்சு; அரிவாளுடன் சென்று நிதி நிறுவனத்தை கதிகலங்கச் செய்த கணவர்: EMI-யால் நடந்த விபரீதம்

மனைவிடம் ஆபாசமாக பேசியதால் ஆத்திரமடைந்து நிதி நிறுவன ஊழியர்களை அரிவாளுடன் சென்று மிரட்டிய கணவரால் தேனியில் பரபரப்பு ஏற்பட்டது.

மனைவியிடம் ஆபாச பேச்சு; அரிவாளுடன் சென்று நிதி நிறுவனத்தை கதிகலங்கச் செய்த கணவர்: EMI-யால் நடந்த விபரீதம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் பஜாஜ் நிதி நிறுவனம் சார்பில் அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் மாதாந்திர தவணை மூலம் செல்போன் ஒன்று வாங்கியுள்ளார்.

கடந்த சில மாதங்களாக செல்போன் தொகைக்கான மாதாந்திர தவணை சரியாக செலுத்தவில்லை என்று தெரியவந்துள்ளது. இதனையடுத்து பஜாஜ் நிதி நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு தொகையை செலுத்துமாறு கூறியுள்ளனர்.

குடும்ப சூழல் பணம் செலுத்துவது தொடர்பாக தாமதமாகும் என பெண் கூறவே அதனை மறுத்த ஊழியர்கள் அந்த பெண்ணை, திட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் தன்னை பஜாஜ் நிதி நிறுவன ஊழியர்கள் ஆபாச வார்த்தைகளில் திட்டுவதாக கணவரிடம் முறையிட்டுள்ளார்.

இதனைக்கேட்டு ஆத்திரமடைந்த கணவர் பஜாஜ் நிதி நிறுவனத்திற்குச் சென்று அரிவாளுடன் சென்று ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து ரகளையில் ஈடுபட்டவரை அலுவலத்திற்குள் உள்ளே வைத்து பூட்டிய நிறுவன ஊழியர்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். அரிவாளுடன் ஆக்ரோஷமாக வந்து மிரட்டியதில், நிருவன ஊழியர்கள் கதிகலங்கி நின்றனர்.

banner

Related Stories

Related Stories