இந்தியா

பெண்ணைத் திருமணம் செய்து வைக்காத ஆத்திரத்தில் அத்தை குடும்பத்தை தீயிட்டு கொளுத்திய இளைஞர்! - 2 பேர் பலி!

முறைப்பெண்ணைத் திருமணம் செய்துவைக்காத ஆத்திரத்தில் அத்தையின் குடும்பத்தை தீயிட்டுக் கொளுத்திய இளைஞரைப் போலிஸார் தேடி வருகின்றனர்.

கோப்பு படம்
கோப்பு படம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஆந்திர மாநிலத்தின் கிழக்கு கோதாவரி அருகில் உள்ள துல்லா கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாஸ். இவர் தனது அத்தை பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் அத்தையின் பெண் இவரது காதலை ஏற்றுக்கொள்ளாத நிலையில் அந்தப் பெண்ணை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி அத்தை சத்யவதியிடம் கூறியுள்ளார்.

ஆனால் இந்தத் திருமணத்தில் தனது மகளுக்கு விருப்பம் இல்லாததால், ஸ்ரீனிவாஸூக்கு திருமணம் செய்துவைக்க அவரது அத்தை சத்யாவதி மறுத்துள்ளார். அதனால் ஆறு மாதங்களாக திருமணம் செய்துவைக்கும் படி ஸ்ரீனிவாஸ் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சத்யாவதி தனது மகளை வேறு ஒருவருக்கு திருமணம் செய்துவைத்துள்ளார். தனக்கு பெண் தராத ஆத்திரத்தில் கடந்த வாரம் சத்யாவதி வீட்டிற்குச் சென்று ஸ்ரீனிவாஸ் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்த தகராறில் சத்யாவதி காயமடைந்துள்ளார்.

சத்தியவதி வீடு
சத்தியவதி வீடு

ஸ்ரீனிவாஸின் இந்த நடவடிக்கையால் ஆத்திரமடைந்த சத்யாவதி குடும்பத்தினர் போலிஸில் புகார் அளித்துள்ளனர். புகாரைப் பெற்றுக்கொண்ட போலிஸார் விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே ஸ்ரீனிவாஸ் தலைமறைவாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

போலிஸில் புகார் அளித்ததற்காகவும், மகளை திருமணம் செய்துவைக்காத ஆத்திரத்திலும் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இரவு சத்யாவதி வீட்டிற்கு பெட்ரோலுடன் ஸ்ரீனிவாஸ் சென்றுள்ளார்.

வீட்டின் வெளிக்கதவை தாழ்ப்பாழ் போட்டுவிட்டு ஜன்னல் வழியாகவும், வீட்டின் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு அங்கிருந்து ஸ்ரீனிவாஸ் தப்பித்துச் சென்றுள்ளார். சிறிது நேரத்தில் தீ வேகமாகப் பற்றி வீடு முழுவதும் எரிந்துள்ளது.

வீட்டில் உறங்கிக்கிடந்த சத்யாவதி, அவரது மகன்கள் இருவர் மற்றும் சகோதரி மற்றும் அவரது மகள் ஒருவரும் தீயில் சிக்கி வெளியில் வரமுடியாமல் அலறி உள்ளனர். சம்பவம் அறிந்து ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சித்தனர்.

மேலும், கதவை உடைத்து உள்ளே சென்று தீயில் சிக்கியவர்களை மீட்டனர். இதில் சத்யாவதியின் 18 வயதான மகன் ராமு, 5 வயது சிறுமி விஜயலட்சுமி ஆகிய இருவரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சத்யாவதி மற்றும் சகோதரி துர்கா பவானி உள்ளிட்டோர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சத்யாவதி மற்றும் துர்கா பவானி ஆகியோருக்கு 90% தீக்காயத்துடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தையொட்டி ஸ்ரீனிவாஸ் மீது கொலை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories