இந்தியா

கொலைகளுக்கு அஞ்சும் அரசா இது? - முரசொலி தலையங்கம்

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் அ.தி.மு.க-வை விட தி.மு.க கூட்டணி அதிக இடங்களில் வென்றுள்ளது. கிராமப் புறத்தில் மட்டும் தேர்தல் நடத்தலாம். இரட்டை இலையை நம்பி வெற்றி பெறலாம் என்று மாநில அமைச்சர்களோடு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பேசியிருக்கிறார்.

நகர்ப்புறங்களில் தேர்தல் நடைபெற்றால் தி.மு.க அதிகளவில் வெற்றி பெற்று விடும் என்பதும் அவரது கணிப்பாக இருந்துள்ளது. ஆனால் அவரது கணிப்பு பொய்யாகி கிராமப்புறப் பகுதிகளும் தி.மு.க பக்கம் திரும்பிவிட்டது என்பதைத் தேர்தல் முடிவுகள் காட்டியது.

இந்த வெற்றியை தடுக்க ஏராளமான சதிகள் - சூழ்ச்சிகள் - தில்லுமுல்லுகள் - திருகுதாளங்கள் - பொய்க் கணக்குகள் - இருட்டு வேலைகள் - முடிச்சு அவிழ்ப்புகள் செய்யப்பட்டன. அதுமட்டுமின்றி, மாநிலத் தேர்தல் ஆணையத்தை மெளனிக்கச் செய்துவிட்டு அ.தி.மு.க தலைமைக் கழகம் நடத்திய தேர்தலாக பல இடங்களில் மாற்றப்பட்டது.

இதன்மூலம் உள்ளாட்சியைக் கொன்ற, கொல்லும் ஆட்சியாக எடப்பாடி ஆட்சி ஆகிவிட்டது. கொலைகளுக்கு அஞ்சும் அரசா இது என முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.

banner