இந்தியா

அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாமா? -  சீராய்வு மனு மீது இன்று முதல் சுப்ரீம் கோர்ட் விசாரணை!

சபரிமலை வழக்கு மீதான சீராய்வு மனுக்கள் குறித்து 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று முதல் விசாரிக்கவுள்ளது.

அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாமா? -   சீராய்வு மனு மீது இன்று முதல்  சுப்ரீம் கோர்ட் விசாரணை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயதுபெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று முதல் விசாரணைக்கு வருகிறது. தலைமை நீதிபதி தலைமையிலான 9 நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரிக்கிறது.

கேரளாவின் சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த 2018-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல பெண்கள் கோவிலுக்குச் செல்ல முயற்சித்தனர். ஆனால், பா.ஜ.கவினரும் இந்து அமைப்பினரும் வன்முறையில் ஈடுபட, கேரளா முழுவதும் கொந்தளிப்பான சூழல் ஏற்பட்டது.

அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாமா? -   சீராய்வு மனு மீது இன்று முதல்  சுப்ரீம் கோர்ட் விசாரணை!

இந்நிலையில் சபரிமலை தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 56 சீராய்வு மனுக்கள் உட்பட 65 மனுக்கள் மீது 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து அதனை 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என அண்மையில் அறிவித்தது. இதுமட்டுமல்லாமல், மசூதிகளுக்கு பெண்களும் செல்லக் கோரியது, பார்சி மதப் பெண்கள் தொடர்பான வழக்குகளையும் சேர்த்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் சபரிமலை மேல்முறையீட்டு வழக்கை இன்று விசாரணைக்கு வருகிறது. மேலும், சபரிமலை வழக்கு தொடர்பாக நீதிபதிகள் இடையே ஒருமித்த கருத்து நிலவ வேண்டும் என்பதற்காக முந்தைய அமர்வில் இருந்த நீதிபதிகள் எவரும் தற்போது 9 நீதிபதிகள் கொண்ட அமர்வில் இடம்பெறவில்லை.

banner

Related Stories

Related Stories