இந்தியா

‘குடியுரிமை சட்டத்தை எதிர்த்தால் சுடுவேன்’ - வீடியோ வெளியிட்ட போலி போலிஸ்!

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடினால் சுட்டுவிடுவேன் என போராட்டக்கார்களை மிரட்டி வீடியோ வெளியிட்ட முன்னாள் போலிஸை டெல்லி போலிஸார் கைது செய்துள்ளனர்.

‘குடியுரிமை சட்டத்தை எதிர்த்தால் சுடுவேன்’ - வீடியோ வெளியிட்ட போலி போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில், பா.ஜ.க அரசால் கொண்டுவரப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நாடுமுழுவதும் பற்றி எரிந்து வருகிறது. இஸ்லாமியர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட இந்த சட்டத்திற்கு எதிராக அனைத்து மதத்தினரும் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்வா கும்பலைச் சேர்ந்தவர்கள் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பொய் பிரசாரங்களையும், வன்முறையும் அரங்கேற்றி வருகின்றனர்.

சமீபத்தில் டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் போலிஸார் சீருடையில் இத்துத்வா பா.ஜ.க கும்பலைச் சேர்ந்த சிலர் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடினால் சுட்டுவிடுவேன் என போராட்டக்கார்களை போலிஸார் ஒருவர் மிரட்டும் வீடியோ வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், “போலிஸ் சீருடையில் இருக்கும் ஒருவர் தன்னை துணை ஆய்வாளர் என்றும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடினால், போலிஸாரின் மீது கை வைத்தால் அனைவரையும் சுட்டுத் தள்ளிவிடுவேன்” என மிரட்டியுள்ளார்.

மேலும், “உள்துறை சொன்ன உத்தரவுகளே போலிஸ் பின்பற்றி வருகிறது, போராட்டத்தின் போது கற்களை எறிபவர்களை சுடுவேன், செங்களை வீசினால் ராமர் கோயில் கட்டுவேன்” என்று வசனம் பேசியுள்ளார். இதையடுத்து பலரும் அவரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனங்களை பதிவு செய்தனர்.

இதையடுத்து இந்த வீடியோவில் பேசியவர் குறித்து புகார் அக்கப்பட்டது. புகாரைப் பெற்றுகொண்ட DCP, விசாரணை நடத்த உத்தரவிட்டார். பின்னர் டெல்லி போலிஸார் வீடியோவில் பேசியவரைக் கைது செய்து விசாரித்தனர். அதில், வீடியோவொல் பேசிய அந்த நபர் போலிஸ் அதிகாரி இல்லை என்றும், அவர் பெயர் ராகேஷ் தியாகி என்பதும் தெரியவந்தது.

மேலும், காவல்துறையில் பணியாற்றிய அவர், கடந்த 2014-ம் ஆண்டு பதவி விலகியதும் தெரியவந்தது. அதுமட்டுமின்றி, தன்னுடைய பழைய சீருடையை பயன்படுத்தாமல், போலியான சீருடையை வாடகைக்குப் பெற்று பயன்படுத்தி வந்துள்ளார்.

இதனையடுத்து டெல்லி போலிஸார் ஆள்மாறாட்டம், வன்முறையை தூண்டுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து ராகேஷை சிறையில் அடைத்தனர். ஜாமீல் வெளிவந்த அவர் மீண்டும், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தற்போது போலிஸாருக்குப் பெரும் தலை வலியை ஏற்படுத்தியுள்ளது. போலி சீருடையின் மூலம் போராட்டக்கார்களை மிரட்டிய போலி போலிஸாரின் நடவடிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories