இந்தியா

“இந்தியர்கள் அனைவரும் இந்துக்களே” - ஆர்.எஸ்.எஸ் தலைவரின் சர்ச்சை பேச்சு!

இந்துராஷ்டிராவை உருவாக்க முயற்சிக்கும் ஆர்.எஸ்.எஸ்., இந்தியர்களை இந்துக்களாகவே பார்ப்பதாக மோகன் பகவத் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“இந்தியர்கள் அனைவரும் இந்துக்களே” - ஆர்.எஸ்.எஸ் தலைவரின் சர்ச்சை பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பன்முகத்தன்மையுடனும், மதச்சார்பற்று, வேற்றுமையில் ஒற்றுமை கண்டு உலகின் மற்ற நாடுகளை அண்ணாந்து பார்க்க வைக்கும் நாடாக விளங்கி வருகிறது இந்தியா. இதனை இந்துக்களை மட்டுமே கொண்ட நாடாக மாற்ற பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்துத்வா கும்பல் தீவிரமாக முயற்சித்து வருகிறது.

அதற்கான முன்னெடுப்பாக, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, சிறுபான்மையினர்களை ஒதுக்கும் வகையில் குடியுரிமை சட்டத்தில் திருத்தத்தை மேற்கொண்டுள்ளது மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு. இதற்கு நாடெங்கும் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஐதராபாத்தில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ்ஸின் கூட்டத்தில் பேசிய அதன் தலைவர் மோகன் பகவத், “இந்திய மக்கள் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், வெவ்வேறு மொழிகளைப் பேசி வந்தாலும் நாட்டில் உள்ள அனைத்து மக்களையுமே இந்து மதத்தைச் சேர்ந்தவர்களாகவே ஆர்.எஸ்.எஸ் பார்க்கிறது” எனப் பேசியுள்ளார்.

மோகன் பகவத்தின் இந்தப் பேச்சு இந்துக்கள் அல்லாதவர்களுக்கு மட்டுமல்லாது இந்துக்களுக்குமே கோபத்தை வரவழைத்திருக்கிறது. பலரும் மோகன் பகவத்தின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories