இந்தியா

“மாற்றம் முன்னேற்றம் அன்புமணியா? 'ஆப்சென்ட்’ அன்புமணியா?” - நாடாளுமன்றத்தில் சாதனை படைத்த சின்னய்யா!

நாடாளுமன்றத்திலேயே மிகக்குறைவான வருகைப் பதிவு கொண்ட தமிழக எம்.பி எனும் மோசமான சாதனையைப் பதிவு செய்துள்ளார் பா.ம.க-வின் மாநிலங்களவை எம்.பி அன்புமணி ராமதாஸ்.

“மாற்றம் முன்னேற்றம் அன்புமணியா? 'ஆப்சென்ட்’ அன்புமணியா?” - நாடாளுமன்றத்தில் சாதனை படைத்த சின்னய்யா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மக்கள் பிரதிநிதிகளாக மக்களவை மற்றும் மாநிலங்களவைக்குச் செல்லும் உறுப்பினர்கள், தாங்கள் சார்ந்த மாநிலம் மற்றும் தொகுதிகளின் நலனுக்காகவும், தேசிய நலனுக்காகவும் குரல் கொடுக்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.

சமீபத்தில், இந்தியாவின் 17வது நாடாளுமன்றம் அமைந்த பின்னர் இரண்டு கூட்டத்தொடர்கள் நடந்து முடிந்திருக்கின்றன. இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகை, செயல்பாடு குறித்த தகவல்களை நாடாளுமன்றம் வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்றம் வெளியிட்டுள்ள தகவலின் மூலம், மாநிலங்களவை எம்.பியாக உள்ள பா.ம.க-வின் அன்புமணி ராமதாஸ், நாடாளுமன்றப் பக்கமே அதிகம் தலைவைத்துப் படுக்காத விபரம் வெட்டவெளிச்சமாகியுள்ளது.

மேலும், அன்புமணி ராமதாஸ் இதுவரை வெறும் 15% மட்டுமே வருகைப் பதிவு வைத்திருப்பதாகவும், மொத்தம் 2 விவாதங்களில் மட்டுமே பங்கேற்றிருப்பதாகவும், எந்தவொரு கேள்வியையோ, தனிநபர் மசோதாவையோ முன்வைக்கவில்லை என்கிற தகவலும் வெளியிடப்பட்டுள்ளது.

“மாற்றம் முன்னேற்றம் அன்புமணியா? 'ஆப்சென்ட்’ அன்புமணியா?” - நாடாளுமன்றத்தில் சாதனை படைத்த சின்னய்யா!

அன்புமணி பங்கேற்ற விவாதங்களில், இஸ்லாமியர்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் துரோகமிழைக்கும் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்ததும் ஒன்று. ஆக, ஈழத் தமிழர்களுக்கு துரோகமிழைக்கவே அவரை எம்.பி-யாக்கி டெல்லிக்கு அனுப்பி இருக்கிறது பா.ம.க. அதற்கு கூட்டணி தர்மக் கணக்கு எனப் பெயரும் வைத்திருக்கிறார் பா.ம.க நிறுவனர் ராமதாஸ்.

அ.தி.மு.க-வையும், எடப்பாடி பழனிசாமி அரசையும் கடுமையாக விமர்சித்துவிட்டு, அந்தக் கட்சியுடனேயே 7 மக்களவை சீட்களையும், 1 மாநிலங்களவை சீட்டையும் பெற்றுத் தேர்தலைச் சந்தித்து ஏழிலும் தோற்றதோடு இல்லாமல், மாநிலங்களவைக்கும் செல்லாமல் மக்களை ஏமாற்றி வருகிறார் பா.ம.க-வின் அன்புமணி ராமதாஸ்.

இதனால், கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது ‘மாற்றம் முன்னேற்றம்’ என முழங்கிவிட்டு, தற்போது நாடாளுமன்றத்திற்குக் கூடச் செல்லாமல் பதுங்கிக் கிடப்பது ஏன் என பா.ம.க எம்.பி., அன்புமணி ராமதாஸை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories