இந்தியா

குடியுரிமைச் சட்டம்: ஏன் முஸ்லீம்களை சேர்க்கவில்லை?- மோடி அரசுக்கு மேற்குவங்க பா.ஜ.க., தலைவர் கேள்வி!

எல்லா மத, இனமும் சம அளவில் நடத்தப்படும் நாடான இந்தியாவை மற்ற எந்த ஒரு நாட்டோடும் ஒப்பிட்டுப் பார்க்கக்கூடாது என மோடி அரசை சாடும் விதமாக மேற்குவங்க பா.ஜ.க துணை தலைவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

குடியுரிமைச் சட்டம்: ஏன் முஸ்லீம்களை சேர்க்கவில்லை?- மோடி அரசுக்கு மேற்குவங்க பா.ஜ.க., தலைவர் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. பா.ஜ.க அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என மாணவர்கள், அரசியல் கட்சியினர் நடத்திவரும் போராட்டம் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், குடியுரிமை சட்டம் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல; எதிர்கட்சிகள் திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்வதாக கூறுகின்றன. பிரதமர் மோடி முதல் கீழ்மட்ட அளவில் இருக்கும் பா.ஜ.க தொண்டர்கள்வரை ஒரே வசனத்தை மக்கள் மத்தியில் பேசி வருகின்றனர்.

பா.ஜ.கவினரின் இந்த விஷமத்தனமான சட்டத்தை புரிந்துக்கொண்டு நாட்டு மக்கள் பா.ஜ.க ஆட்சிக்கு எதிரான மனநிலையில் உள்ளனர். அதுமட்டுமன்றி சில இடங்களில் பா.ஜ.க-வுடன் கூட்டணியில் இருந்தவர்களும், ஏன் பா.ஜ.க எம்.எல்.ஏக்களும் கூட இந்த சட்டத்தை கடுமையாக எதிர்த்து கூட்டணியில் இருந்து விலகியும், பதவிகளை ராஜினாமா செய்தும் வருகின்றனர்.

இந்நிலையில், மேற்குவங்க பா.ஜ.கவின் துணைத் தலைவராக இருப்பவர் சந்திர குமார் போஸ். இவர் குடியுரிமை தொடர்பாக சொந்த கட்சியான பா.ஜ.க.,வுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதன்படி சந்திர குமார் போஸ் அவரது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.

அதில், குடியுரிமை சட்டத்திற்கு எந்த மதத்துக்கும் தொடர்பு இல்லை என்றால், ஏன் இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களை ஏன் பிரித்து பார்க்கவேண்டும். அதிலும் ஏன் இஸ்லாமியர்களை மட்டும் இணைக்காமல் விட்டீர்கள். எல்லாம் வெளிப்படையாக இருக்கட்டும்.

எல்லா மத, இன மக்களும் சம அளவில் நடத்தப்படும் மதசார்பற்ற நாடான இந்தியாவை மற்ற வேறு எந்த ஒரு நாடோடும் ஒப்பிட்டு பார்க்கக்கூடாது” எனத் தெரிவித்துள்ளார். மேற்படி, சந்திரகுமார் போஸ், சுதந்திர போராட்ட தலைவர்களில் ஒருவரான சுபாஷ் சந்திர போஸின் உறவுமுறை கொள்ளுப்பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

சொந்த கட்சியில் இருந்தே குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போர் கொடி தூக்கியுள்ள பா.ஜ.க துணைத்தலைவரின் ட்விட்டர் பதிவு, பா.ஜ.க., வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories