இந்தியா

’முதலீடுகளே இல்லாதபோது 5 ட்ரில்லியன் பொருளாதாரம் என பா.ஜ.க சொல்வது சுத்தப் பொய்’ : SBI தலைவர் பேச்சு !

முதலீடுகளை அதிகாரிக்காமல் இந்தியாவின் பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலராக உயர்த்துவது என்பது சாத்தியமில்லை என எஸ்.பி.ஐ தலைவர் ரஜ்னீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

’முதலீடுகளே இல்லாதபோது 5 ட்ரில்லியன் பொருளாதாரம் என பா.ஜ.க சொல்வது சுத்தப் பொய்’ : SBI தலைவர் பேச்சு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கடந்த சில மாதங்களாக இந்திய பொருளாதாரம் கடும் தேக்க நிலையைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக ஆட்டோ மொபைல் நிறுவனங்களின் வீழ்ச்சி, பல்வேறு தொழில்களின் நலிவு, உற்பத்தி நிறுத்தம், தொழிலாளர் வேலையிழப்பு மற்றும் வங்கிகளில் வராக்கடன் அதிகரிப்பு என பொருளாதார வீழ்ச்சியை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளன.

இந்நிலையில், இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சங்க கூட்டமைப்பின் 92-வது ஆண்டு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் பாரத ஸ்டேட் வங்கித் தலைவர் ரஜ்னீஷ் குமார் கலந்துக்கொண்டார். அவரிடம் பொருளாதார தேக்கநிலைக்குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது.

அப்போது பேசிய அவர், “இந்தியா பொருளாதாரம் 5 ட்ரில்லியன் டாலர் என்ற இலக்கை அடையவேண்டுமெனில், ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும். தற்போதைய சூழலில் முதலீடுகளை அதிகாரிக்காமல் இந்தியாவின் பொருளாதாரம் 5 ட்ரில்லியன் டாலராக உயர்த்துவது என்பது சாத்தியமில்லை” என தெரிவித்தார்.

அதனையடுத்து, வங்கிகளிடம் கடன் வட்டியை குறைக்க வர்த்தக நிறுவனங்கள் தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள். இதுதொடர்பாக எழுப்பட்ட கேல்விக்கு பதிலளித்த ரஜ்னீஷ் குமார், “வங்கிகளுக்கு ஒரு குறிப்பிட்ட எல்லை உள்ளது. அதற்கு அப்பால் வங்கிகளால் செயல்பட முடியாது. வட்டி வீதங்களைப் பொறுத்தமட்டில் வங்கிகள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் குறைக்க முடியாது.

அதுமட்டுமின்றி, இந்த தேக்க நிலைக்காரணமாக, பெருநிறுவனங்களின் சேமிப்புகள் எதிர்பார்த்த அளவுக்கு வங்கிகளுக்கு கிடைக்கவில்லை. இதனால் வங்களில் மூலதனப் பற்றாக்குறை காணப்படுகிறது.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories