இந்தியா

இஸ்ரோவின் அடுத்த நிலவு திட்டத்தில் பணியாற்ற 'சந்திரயான் 2' இயக்குநருக்கு வாய்ப்பு மறுப்பு - ஏன் தெரியுமா?

சந்திரயான் 2 திட்டத்தில் பணியாற்றிய திட்ட இயக்குநர் அடுத்த சந்திரயான் திட்டத்தில் பணியாற்ற வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நிலவின் தென் துருவப்பகுதியை ஆராய்வதற்காக விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் போது தொடர்பை இழந்ததால் இஸ்ரோவின் அந்தத் திட்டம் பின்னடைவை சந்தித்தது. ஆதலால், அடுத்த சந்திரயான் திட்டத்துக்கான திட்ட இயக்குநரை இஸ்ரோ மாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏனெனில், சந்திரயான் 2 விண்கலத்தை விண்ணில் ஏவுவதிலும், நிலை நிறுத்துவதிலும் ஏகப்பட்ட பிரச்னைகளையும், பின்னடைவுகளையும் சந்தித்ததால் இந்தத் திட்டத்தின் திட்ட இயக்குநராக இருந்த இரண்டு பெண்களில் ஒருவரான வனிதாவுக்கு அடுத்த சந்திரயான் திட்டத்தில் பணியாற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

எனவே, சந்திரயான் 3 திட்டத்துக்கு தமிழகத்தைச் சேர்ந்த வீர முத்துவேல் என்பவர் திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர், இஸ்ரோவின் தகவல் மேலாண்மை பிரிவின் துணை இயக்குநராக இருந்தவர் ஆவார். மேலும், சந்திரயான் 2 திட்டத்தில் திட்ட இயக்குநராக இருந்த ரிது கரிதால் இஸ்ரோவின் அடுத்த சந்திரயான் திட்டத்திலும் பணியாற்றுகிறார்.

சந்திரயான் 3 விண்கலத்தை 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதில் ரோவரும், லேண்டரும் மட்டும் இருக்கும் என்றும், ஆர்பிட்டர் இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories