இந்தியா

“பாலியல் வன்முறை சம்பவங்கள் பற்றி பேசாத மோடியை யாரும் கேள்வி கேட்க மாட்டார்களா?” - ரன்தீப் சிங் ஆவேசம்!

“பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பாக வாய் திறந்து பேசாத மோடியை யாரும் கேள்வி கேட்க மாட்டார்களா?” என காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா கேள்வி எழுப்பியுள்ளார்.

“பாலியல் வன்முறை சம்பவங்கள் பற்றி பேசாத மோடியை யாரும் கேள்வி கேட்க மாட்டார்களா?” - ரன்தீப் சிங் ஆவேசம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் கூட தெலங்கானா மாநிலத்தில் கால்நடை பெண் மருத்துவர் லாரி ஓட்டுநர்களால் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய குற்றவாளிகள் 4 பேரையும் போலிஸார் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, உத்தர பிரதேச மாநிலத்தில் தன்னை பாலியல் வல்லுறவு செய்த குற்றவாளிகளிக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சி கூறச் சென்ற இளம்பெண்ணை ஜாமீனில் வெளிவந்த குற்றவாளி மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து கடுமையாகத் தாக்கி தீயிட்டு கொளுத்தினார்கள். இதில் சிகிச்சை பலனின்றி அந்த இளம்பெண் உயிரிழந்தார்.

இதனிடையே, அந்த இளம்பெணின் சகோதரி குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கும் உத்தரவாதத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் வந்து அளிக்கவேண்டும் என வலியுறுத்தி, உயிரிழந்த பெண்ணை எரிக்காமல் போராட்டத்தினார்.

,ஆனால், உத்தர பிரதேச அரசின் அறிவுறுத்தல் பேரில் போலிஸாரே இளம்பெண்ணுக்கு இறுதி சடங்க செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக பாலியல் வன்கொடுமைகளின் தலைநகரமாக இந்தியா இருப்பதாகவும், இந்தியாவில் வாழும் பெண்கள் மற்றும் குழந்தைகளை ஏன் பாதுகாக்கத் தவறுகிறீர்கள் என உலக நாடுகள் கேள்வி எழுப்புகின்றன என நேற்று முன்தினம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினர்.

இதுகுறித்து, காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா ட்விட்டரில் மோடி அரசுக்கு எதிராக கேள்வி எழுப்பியுள்ளார். அதில், “இந்தியாவின் ஆன்மா வலிப்பது போன்று பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்டவர்கள் நீதி கேட்டு குரல் எழுப்புகிறார்கள்.

நாட்டில் சீரழிந்துள்ள சட்ட ஒழுங்கு பிரச்சனையால் குற்றவாளிகள் சுதந்திரமாக வெளியே நடமாடுகிறார்கள். ஆனால், எந்தவித வருத்தமும், கோபமின்றி மோடிஜீ அமைதியாக இருக்கிறார். இந்த சம்பவங்கள் தொடர்பாக ஒருவார்த்தை கூட பேசவில்லை.

அவரை யாரும் கேள்வி கேட்க மாட்டார்களா? ஏன்” என கேள்வி எழுப்பி, கடந்த கால காங்கிரஸ் ஆட்சியின் போது அப்போது மோடி விமர்சித்து பேசிய வீடியோ பதிவு ஒன்றையும் அதில் இணைத்து வெளியிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories