இந்தியா

தொடரும் பாலியல் கொலைகள் : பா.ஜ.க ஆளும் திரிபுராவில் வன்கொடுமைக்கு ஆளான 17 வயது மாணவி எரித்துக்கொலை

திரிபுராவில் 17 வயது சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடரும் பாலியல் கொலைகள் : பா.ஜ.க ஆளும் திரிபுராவில் வன்கொடுமைக்கு ஆளான  17 வயது மாணவி எரித்துக்கொலை
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தெலங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன், கால்நடை பெண் மருத்துவர் ஒருவர், லாரி ஓட்டுநர்களால் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய குற்றவாளிகள் 4 பேரையும் போலிஸார் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர். இது நாடு முழுவதும் பல்வேறு விவாதங்களை கிளப்பி உள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, உத்தர பிரதேச மாநிலத்தில் பாலியல் வல்லுறவுக்கு ஆளான பெண் ஒருவர், குற்றவாளிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சி கூறச் சென்றபோது ஜாமீனில் வெளிவந்த குற்றவாளி மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து கடுமையாகத் தாக்கி தீயிட்டு கொளுத்தினர்.

இதில் 90% தீக்காயத்துடன் சிகிச்சை பெற்றுவந்த அந்த இளம்பெண் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பெண்கள் மீது தொடர்ந்து பாலியல் வன்முறைகள் ஏவப்பட்டு வருவது, பெற்றோரிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவங்களின் வடு மறையாத நிலையில், பா.ஜ.க ஆளும் திரிபுரா மாநிலத்தில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திரிபுராவை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் முகநூல் மூலம் அஜோய் ருத்ரா பால் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்துள்ளார். இந்நிலையில் சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி வீட்டை விட்டு வெளியே வரும் படி கூறியுள்ளார்.

தொடரும் பாலியல் கொலைகள் : பா.ஜ.க ஆளும் திரிபுராவில் வன்கொடுமைக்கு ஆளான  17 வயது மாணவி எரித்துக்கொலை

அதனை நம்பி சிறுமி வீட்டை விட்டு வெளியேறி அஜோயுடன் சாந்திபஜார் பகுதியில் உள்ள வீட்டில் தங்கியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் குடும்பத்தினர் பெண்ணை தங்களிடம் ஒப்படைக்கும்படி கேட்டுள்ளனர்.

இதனைக் கேட்ட அஜோய், இதுகுறித்து போலிஸிடம் தெரிவித்தால் சிறுமியைக் கொலை செய்வேன் என்றும், 50,000 ரூபாய் பணம் கொடுத்தால்தான் சிறுமியை விடுவிப்பதாகவும் மிரட்டியுள்ளார்.

இதனிடையே, அந்த சிறுமியை அஜோயும் அவரது நண்பர்கள் 2 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறுமியின் தாயார் தனது மகளை விட்டுவிடும் படி 17,000 ரூபாய் கொடுத்துள்ளார். இந்த பணத்திற்கு மேல் கொடுக்க பணம் இல்லை என்று கூறியுள்ளனர்.

கேட்ட 50,000 ஆயிரத்தைக் கொடுக்காத ஆத்திரத்தில் அஜோய் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேரும் சேர்ந்து சிறுமியின் மீது மண்ணெண்னை ஊற்றி தீயிட்டு கொளுத்தினார். இந்த சம்பவத்தை தடுக்கச் சென்ற சிறுமியின் தாயாருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் இரவரையும் மீட்டு அருகில் இருந்த ஜி.பி. பந்த் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதில், 90% தீக்காயம் ஏற்பட்டு பலத்த காயமடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சாந்தி பஜார் போலிஸார் முக்கிய குற்றவாளி அஜோய் மற்றும் அவரது தாயார் மினாட்டி ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மற்ற இருவரையும் போலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். திரிபுராவில் 17 வயது சிறுமியை கூட்டுபாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories