இந்தியா

வருவாய் இழப்பை ஈடுகட்ட ஜிஎஸ்டியை உயர்த்த மோடி அரசு திட்டம்!

விலக்களிக்கப்பட்டுள்ள பொருட்களுக்கு ஜிஎஸ்டியை அமல்படுத்தவும், சில பொருட்களின் ஜிஎஸ்டியை உயர்த்தவும் மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது

வருவாய் இழப்பை ஈடுகட்ட ஜிஎஸ்டியை உயர்த்த மோடி அரசு திட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பொருளாதார மந்தநிலை காரணமாக ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை ஈடுகட்ட, குறிப்பிட்ட சில பொருட்களுக்கான ஜி.எஸ்.டியை உயர்த்தவும், விலக்களிக்கப்பட்டுள்ள பொருட்களை ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவரவும் பாஜக அரசு திட்டமிட்டுள்ளது

ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் மூலம் மத்திய அரசுக்கு கிடைக்கும் வருவாயில் சரிவு ஏற்பட்டுள்ளது. 2017 மே மாதத்தில் 14.4% ஆக இருந்த ஜிஎஸ்டி வருவாய், தற்போது 11.6% ஆக குறைந்துள்ளது.

இதன் காரணமாக மத்திய அரசுக்கு வரவேண்டிய இரண்டு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், சில பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை மாற்றியமைப்பது குறித்து மாநில அரசுகளுடன் ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசனை மேற்கொண்டுள்ளது.

வருவாய் இழப்பை ஈடுகட்ட ஜிஎஸ்டியை உயர்த்த மோடி அரசு திட்டம்!

இது தொடர்பாக மாநில அரசுகளுக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில் இம்மாத இறுதிக்குள் மாநில அமைச்சர்கள் பங்கேற்கும் ஜிஎஸ்டி கூட்டத்தில் தத்தம் கருத்துகளை பதிவு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.

பொருளாதார மந்த நிலையுடன் வரி வசூல் குறைந்திருப்பதால் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க ஜிஎஸ்டி வரி விகிதத்தை மாற்றியமைப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இதனால் புகையிலை, குளிர்பானங்கள், கார்கள் போன்ற சில பொருட்களின் மீதான வரிவிதிப்பை உயர்த்த ஜிஎஸ்டி கவுன்சில் திட்டமிட்டுள்ளது.

ஜிஎஸ்டிக்கு முன்பாக இருந்த மறைமுக வரிகள் 25% ஆக இருந்தது. அதற்கு பிறகு 18% ஆக குறைந்தது. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அளித்துள்ள உறுதி மொழிகளால், மத்திய அரசு வழங்கவேண்டிய 38 ஆயிரம் கோடி ரூபாய் இந்த ஆண்டு இறுதிக்குள் 90 ஆயிரம் கோடியாகக் கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவை ஒழுங்காக அணுகி அதற்கு சரியான தீர்வு காணாமல் மேலும் மேலும் மக்கள் மீதே வரிச்சுமையை செலுத்துவது எந்த விதத்தில் சரியாக இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories