இந்தியா

“அறுவைசிகிச்சை நோயாளிகளுக்கென புதிய திட்டம் அறிமுகம்” : அடுத்த அதிரடியில் இறங்கிய ஜெகன் மோகன்!

அறுவை சிகிச்சை மேற்கொண்ட நோயாளிகளுக்கென புது திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்ற நாள் முதல் அம்மாநில மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை போர்க்கால அடிப்படையில் கொண்டுவந்து அதனை அதிரடியாக அமல்படுத்தியும் வருகிறார்.

ஆந்திர மக்களுக்கு அரசு மற்றும் தனியார் துறையில் 70% வேலைவாய்ப்பு, போலிஸாருக்கு, சுழற்சி முறையில் கட்டாய வார விடுப்பு, ரேசன் பொருட்களை வீட்டுக்கே வந்து வழங்குதல், கல்வி வியாபாரமாவதைத் தடுத்தல் என பல அதிரடி திட்டங்களை சட்டமாகக் கொண்டுவந்தார் ஜெகன் மோகன் ரெட்டி.

அந்தவகையில், அறுவை சிகிச்சை செய்த பிறகு, ஓய்வெடுக்கும் நோயாளிகளுக்கு நாளொன்றுக்கு ரூ.225 என மாதம் ரூபாய் 6,000 வழங்கும்படி திட்டம் ஒன்றை ஜெகன் மோகன் ரெட்டி அறிமுகப்படுத்தியுள்ளார்.

“அறுவைசிகிச்சை நோயாளிகளுக்கென புதிய திட்டம் அறிமுகம்” : அடுத்த அதிரடியில் இறங்கிய ஜெகன் மோகன்!

அறுவை சிகிச்சை முடிந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, நோயாளிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாகவே உதவித்தொகை செலுத்தப்பட்டுவிடும் என்றும், 26 சிறப்புப் பிரிவுகளில் 836 விதமான அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, 10 நோயாளிகளுக்கு முதற்கட்டமாக கடந்த 25ம் தேதி நிதியுதவி வழங்கிய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, சத்ய லீலா என்ற பெண்மணியை சந்தித்து நலம் விசாரித்ததோடு, அவருக்கு 60 நாட்களுக்கான உதவித்தொகையையும் வழங்கினார்.

இதுமட்டுமல்லாமல், ஆரோக்கியஸ்ரீ ஆசாரா என்ற திட்டத்தையும் அமல்படுத்தினார். அதில், ஆண்டு வருமானம் 5 ஆயிரத்துக்கும் கீழ் உள்ளவர்களுகான மருந்து செலவுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

“அறுவைசிகிச்சை நோயாளிகளுக்கென புதிய திட்டம் அறிமுகம்” : அடுத்த அதிரடியில் இறங்கிய ஜெகன் மோகன்!

இது 2020 ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வரும் என்றும், டெங்கு உள்ளிட்ட 2,000 வகையான நோய்களுக்கான மருந்து செலவுகள் சேர்க்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஜெகன் மோகன் ரெட்டியின் இந்த அடுத்தடுத்த அறிவிப்புகள் ஆந்திர மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருவது மட்டுமல்லாமல், அவரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories