இந்தியா

''தமிழகத்தில் விநியோகம் செய்யப்படும் பாலில் நச்சுத்தன்மை அதிகம்'' - மத்திய அரசு அதிர்ச்சித் தகவல்!

தமிழகத்தில் விநியோகம் செய்யப்படும் பாலில் நச்சுத்தன்மை அதிகம் உள்ளதாக மத்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே மக்களவையில் தெரிவித்துள்ளார்.

''தமிழகத்தில் விநியோகம் செய்யப்படும் பாலில் நச்சுத்தன்மை அதிகம்'' - மத்திய அரசு அதிர்ச்சித் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

மக்களவையின் கேள்வி நேரத்தின் போது, பாலில் செய்யப்படும் கலப்படம் குறித்து தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே, ''தமிழகம், கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பாலில் அப்லாடாக்சின் எம்.1 (Aflatoxin M1) என்ற நச்சு அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக இருக்கிறது.

நச்சுத்தன்மை அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. இதற்கு, அடுத்த இடங்களில் டெல்லி, கேரளா மாநிலங்கள் உள்ளன.

தமிழகத்தில் 551 பால் மாதிரிகள் பரிசோதனை செய்ததில் 88 பால் மாதிரிகளில் நச்சுத்தன்மை அதிகம் இருப்பது, உணவு கட்டுப்பாடு மற்றும் தர நிர்ணய ஆணையம் நடத்திய ஆய்வில் தெரிய வந்தது'' எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories