இந்தியா

“விருப்ப ஓய்வுபெற 70 ஆயிரம் ஊழியர்கள் மனு”- தொலைபேசித்துறை தனியார் மயம் எதிரொலி!

பி.எஸ்.என்.எல் மற்றும் வி.ஆர்.எஸ் திட்டத்தில் ஓய்வு பெற 70,000 ஊழியர்கள் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

“விருப்ப ஓய்வுபெற 70 ஆயிரம் ஊழியர்கள் மனு”- தொலைபேசித்துறை தனியார் மயம் எதிரொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மத்திய அரசின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் பா.ஜ.க ஆட்சியால் படு நஷ்டத்தை சந்தித்து வருகிறது. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ரூ.14,300 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பி.எஸ்.என்.எல் ஊழியர்களின் நீண்ட கால போராட்டத்துக்கு பிறகு, 4ஜி சேவை வழங்க மத்திய அரசு முன்வந்துள்ளது. அதற்கிடையில், வருவாயில் பெரும்பகுதி சம்பளத்துக்கே செல்வதால், சம்பள சுமையை குறைக்கும் வகையில் பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் ஊழியர்களுக்கு வி.ஆர்.எஸ் திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.

அதன்படி தற்போது வரை பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் 1.76 லட்ச ஊழியர்கள் பணிபுரிந்துவருகிறார்கள். இதில் 1.06 லட்சம் பேர் 50 வயதுக்கும் மேற்பட்டவர்கள். அதனால் 80 சதவிதம் ஊழியர்கள் இந்தத் திட்டத்தைத் தேர்வு செய்வார்கள் என கூறப்பட்டது.

“விருப்ப ஓய்வுபெற 70 ஆயிரம் ஊழியர்கள் மனு”- தொலைபேசித்துறை தனியார் மயம் எதிரொலி!

இந்த திட்டத்தின்படி, 53 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களுக்கு தங்கள் மீதமுள்ள வேலைநாட்கள் ஊதியத்தில் 125 சதவிதம் கூடுதலாக சம்பளம் பெறுவார்கள். அதேப்போல், 50 முதல் 53 வயதுள்ள ஊழியர்கள் தங்களின் மீதமுள்ள பணிக்காலத்தில் 80 முதல் 100 சதவிதம் பணம் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

அதுமதுமட்டுமின்றி, “55 வயதுக்கு மேல் உள்ள ஊழியர்கள் வி.ஆர்.எஸ் திட்டத்தை தேர்வு செய்தால் 60 வயது அடைந்த பின்பு தான் ஓய்வூதியம் தொடங்கும் என்றும் 55 வயது அல்லது அதற்கு குறைவான வயதுள்ளவர்கள் வி.ஆர்.எஸ் திட்டத்தை தேர்வு செய்தால் அடுத்த ஆறு ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஓய்வூதியம் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் சங்க நிர்வாகி செல்லப்பா கூறுகையில், “இந்த திட்டம் முழுக்க முழுக்க அரசாங்கத்திற்கு சாதகமானது. இதனால் பி.எஸ்.என்.எல் துறையில் மத்திய பாஜக அரசு, தான் விரும்பிய செயல்களை தாராளமாக மேற்கொள்ளும்.

“விருப்ப ஓய்வுபெற 70 ஆயிரம் ஊழியர்கள் மனு”- தொலைபேசித்துறை தனியார் மயம் எதிரொலி!

இந்த திட்டத்தின் நோக்கம் ஊழியர்களை குறைப்பதல்ல, ஊழியர்களிடம் எழும் எதிர்ப்புகளை குறைப்பதாகும். குறிப்பாக பி.எஸ்.என்.எல் தனியார் மயமாகக்கூடாது எதற்காக வலுவான போராட்டங்களை ஊழியர்கள் நடத்திவந்தார்கள்.

இனி ஊழியர்களின் குறைப்பால், இனி பி.எஸ்.என்.எல் நிர்வாகத்தை தனியாரிடம் தாராளமாக விற்கமுடியும். நீக்கப்பட்ட ஊழியர்களுக்கு பிறகு புதிய ஊழியர்கள் வேலைக்கு எடுக்கமட்டார்கள். அந்த ஊழியர் செய்யவேண்டிய வேலைகளை ரிலையன்ஸ் ஜியோ போன்ற நிறுவனத்திற்கு அளித்துவிடுவார்கள்.

அதுமட்டுமின்றி, மீதமுள்ள ஊழியர்களுக்கும் பணிச்சுமை அதிகரிக்கும். மோடி அரசின் இந்த மோசமான நடவடிக்கையை ஊழியர்கள் புரிந்துக்கொள்ளவில்லை என்பதே அதிர்ச்சி அளிக்கிறது. மோடி அரசு இந்த திட்டத்தை தனியாரிடம் விடவே இந்த கவர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories