India

#LIVE மகாராஷ்டிரா குழப்பம் - 6 மாதத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் கட்சிக்கு ஆட்சி!

#LIVE மகாராஷ்டிரா குழப்பம் - 6 மாதத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் கட்சிக்கு ஆட்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on
12 November 2019, 02:23 PM

ஜனநாயகத்தை கேலி கூத்தாக்கிய பா.ஜ.க - காங்கிரஸ் குற்றச்சாட்டு. காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநர் ஏன் அழைக்கவில்லை என கேள்வி. 

12 November 2019, 02:23 PM

 ஜனநாயகத்தை பா.ஜ.க கேலிக் கூத்தாக்கி விட்டது -  அகமது பட்டேல்

12 November 2019, 02:20 PM

காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ் கட்சியினர் செய்தியாளர் சந்திப்பு!

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதில் பல ஐயங்கள் இருப்பதாக தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், பிரபுல் பட்டேல் செய்தியாளர் சந்திப்பு.

12 November 2019, 01:53 PM

6 மாதங்களுக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ஜனாதிபதி ஆட்சி!

மகாராஷ்டிராவில் 6 மாதங்களுக்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருக்கும்; அதற்கு முன்னர் எந்தக் கட்சியேனும் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்தால் குடியரசுத் தலைவர் ஆட்சி திரும்பப் பெறப்படும் - உள்துறை அமைச்சகம்

12 November 2019, 12:11 PM

குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்!

மஹாராஷ்டிராவில் எந்த கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முடியாததால், ஆளுநரின் பரிந்துரையின் பேரில் குடியரசு தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது.

12 November 2019, 12:07 PM

சிவசேனா ஆளுநர் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது .

12 November 2019, 12:07 PM

தேசியவாத காங்கிரஸ்-சிவசேனா-காங்கிரஸ் கூட்டணி அமைய இறுதிகட்ட பேச்சு வார்த்தை நடந்து வந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ்-க்கு வழங்கப்பட கால அவகாசம் முடிவதற்குள் மராட்டிய ஆளுநர் பகத்சிங் கோசரி குடியரசு தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரை ஏற்றுக்கொண்டு, மோடி தலைமையின அவசர அமைச்சரவை உடனடியாக கூடியது. அந்த பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்கியது.

12 November 2019, 12:07 PM

மூன்றாவது பெரிய கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார்.தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் உடன் ஆலோசனை செய்த பிறகு முடிவை தெரிவிப்பதாக காங்கிரஸ் தலைமை தெரிவித்து இருந்தது.

12 November 2019, 12:07 PM

இரண்டாவது பெரிய கட்சியான சிவசேனாவிற்கு ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். சிவசேனாவிற்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்க காலதாமதமானது . உத்தவ்தக்ரே உடன் சோனியா காந்தி ஆதரவு தருவது குறித்து தொலைபேசியில் பேசினார்கள். ஆதித்திய தாக்ரே உள்ளிட்ட சிவசேனாவின் முக்கிய தலைவர்கள் ஆளுநரை சந்தித்து பெரும்பான்மையை நிரூபிக்க காலாவகாசம் கோரினார்கள். ஆனால் ஆளுநர் அந்த கோரிக்கையை நிராகரித்தார்.

12 November 2019, 12:07 PM

பா.ஜ.க ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் போதுமான எம்‌எல்‌ஏ-கள் இல்லாததால் ஆட்சி அமைக்க போவது இல்லை என்று ஆளுநரிடம் பா.ஜ.க தரப்பு பதில் தெரிவித்தது.

12 November 2019, 12:07 PM

சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி 15 நாட்களுக்கு மேலாகியும் நவம்பர் 9 ஆம் தேதி வரை ஆளுநர் தரப்பிலிருந்து ஆட்சி அமைக்க எந்த ஒரு கட்சிக்கும் அழைப்பு விடுக்கப் படவில்லை. நவம்பர் 9 இரவு ஆளுநர் தரப்பிலிருந்து பா.ஜ.க பெரும்பான்மையை நிரூபிக்க 48 மணி நேரம் கால அவகாசம் வழங்கப்பட்டது.

12 November 2019, 12:07 PM

மகாராட்டியத்தின் 5 ஆண்டுகால அரசின் காலம் முடிவடைந்ததை அடுத்து பாட்னாவிஸ் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். காபந்து முதல்வராக இருக்கும் படி பாட்னாவிஸை ஆளுநர் பகத் சிங் கோசரி அறிவுறுத்தினார்.

12 November 2019, 12:07 PM

அமித்ஷாவுடன் தேவேந்திர பாட்னாவிஸ் , காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் சரத்பவாரும் ஆட்சி அமைப்பது குறித்து பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் தொடர்ந்து கூட்டணி முடிவு எட்டப்படுவதும் இழுபறி நீடித்து வந்தது.

12 November 2019, 12:07 PM

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உடன் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் பேச்சு வார்த்தை நடத்தினார். சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் மூன்று கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பது என்று பேச்சுவார்த்தை தொடர்ந்து வந்தது.

12 November 2019, 12:07 PM

மராட்டியதில் ஆட்சி அமைக்க 145 எம்‌.எல்.‌ஏக்கள் ஆதரவு வேண்டும் என்ற நிலையில் பா.ஜ.க சிவசேனா கூட்டணி 161 எம்‌.எல்.‌ஏ-களை வைத்திருந்தது. ஆதிகாரத்தை 50:50 பங்கிட வேண்டும். அதில் குறிப்பாக முதல்வர் பதவி மற்றும் அமைச்சரவையில் முக்கிய இடங்கள் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று சிவசேனா ஆட்சி அமைப்பதில் முட்டுக்கட்டை போட்டது.

12 November 2019, 12:07 PM

தேர்தல் முடிவுகள் வெளியானதற்கு முன்னரே சிவசேனா ஆட்சி அமைக்க அனைத்து கதவுகளும் திறந்து இருப்பதாக செய்தியாளர் சந்திப்பில் தெரிவிதிருந்தார் கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே. தேர்தல் முடிவுகள் வெளியாகின பாஜக 105 -சிவசேனா 56 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் 54 - காங்கிரஸ் 44 தொகுதிகளில் வெற்றிபெற்றது.

12 November 2019, 11:36 AM

மகாராஷ்ட்ராவில் 288 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நவம்பர் 21ம் தேதி நடந்தது. அதன் முடிவுகள் நவம்பர் 24 ஆம் தேதி வெளியாகின. காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சியும் - சிவசேனாவும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன.

banner

Related Stories

Related Stories