இந்தியா

கைது செய்யப்பட்ட சிறுவர்களின் நிலை என்ன? : பெற்ற குழந்தைகளை பிரிந்து தவிக்கும் காஷ்மீர் மக்கள்!

ஜம்மு - காஷ்மீரில் கைது செய்யப்பட்ட சிறுவர்களின் நிலைமை என்ன? எங்கே, எப்படி இருக்கிறார்கள் என்ற தகவலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சிறுவர்களின் நிலை என்ன? : பெற்ற குழந்தைகளை பிரிந்து தவிக்கும் காஷ்மீர் மக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்ட பிரிவு 370-ஐ ரத்து செய்யும் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் மோடி அரசு நிறைவேற்றியது. அதுமட்டுமின்றி, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தையே ராணுவத்தின் பிடியில் கொண்டுவந்து, திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றிய மோடி அரசு, முன்னாள் முதல்வர்களான பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட தலைவர்களை வீட்டுச் சிறையில் வைத்தது.

மேலும், மாநிலம் முழுவதையும் ராணுவத்தின் கட்டுப்பாட்டு வளையத்தில் வைத்துவிட்டு, மக்கள் நிம்மதியாக, வழக்கமான நடைமுறை வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்ற பொய்யை பா.ஜ.க அரசியல் கட்சி தலைவர்கள் சரளமாக பேசிவந்தனர்.

இந்நிலையில், அரசுக்கு எதிராக பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் என அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோர் ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு படை போலிஸார் கைது செய்து, சிறையில் அடைத்தது.

கைது செய்ததில் 500-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் இருப்பது பெரும் அதிர்ச்சியை அம்மாநில மக்களிடையே ஜனநாயக அமைப்பினர் மத்தியில் ஏற்படுத்தியது. மேலும் பா.ஜ.க அரசின் இத்தகைய அணுகுமுறைக்கு எதிராக பல ஜனநாயக அமைப்பினர் தங்களின் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட சிறுவர்களின் நிலை என்ன? : பெற்ற குழந்தைகளை பிரிந்து தவிக்கும் காஷ்மீர் மக்கள்!

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதிக்குப் பின், ஜம்மு- காஷ்மீரைச் சேர்ந்த பலர் காணாமல் போயிருப்பதாக, அங்குள்ள அரசியல் கட்சிகள், பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து ஜம்மு - காஷ்மீரில், கைது செய்யப்பட்ட சிறுவர்களின் எங்கே, எப்படி இருக்கிறார்கள்?, அவர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்தது. அதன்வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜம்மு - காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின், சிறார் நீதிக் குழுவுக்கு நீதிபதி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

அதில், சிறப்பு அந்தஸ்து நீக்கம் செய்யப்பட்ட பின், ஜம்மு - காஷ்மீரில், பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சிறுவர்களின் நிலை என்ன? அதுகுறித்து விசாரிக்க வேண்டும் மேலும் தொடர்பான வழக்கு விசாரணை அறிக்கையை, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories