இந்தியா

காற்று மாசுபாட்டிற்க்கு பாகிஸ்தான் தான் காரணம் ; பகீர் கிளப்பும் பா.ஜ.க தலைவர்!

இந்தியாவில் காற்றை மாசுபடுத்த பாகிஸ்தான், சீனா விஷ வாயுவை காற்றில் அனுப்பி இருக்கக்கூடும் என பா.ஜ.க மூத்த தலைவர் வினீத் அகர்வால் சர்தா தெரிவித்துள்ளார்.

காற்று மாசுபாட்டிற்க்கு பாகிஸ்தான் தான் காரணம் ; பகீர் கிளப்பும் பா.ஜ.க தலைவர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

நாட்டின் தலைநகரான டெல்லியில் காற்று மாசுபாடு மிக மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. டெல்லியை ஒட்டிய கரியான் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் விளைநிலங்களில் உள்ள சருகுகளை விவசாயிகள் எரிப்பதால் இத்தகைய பாதிப்புகள் ஏற்ப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இத்தகைய பாதிப்புகளினால் கண் எரிச்சல் மற்றும் மூச்சுத் திணறல் போன்ற பிரச்னைகளை டெல்லிவாழ் மக்‍கள் சந்தித்துவருகின்றனர்.

காற்று மாசுபாட்டிற்க்கு பாகிஸ்தான் தான் காரணம் ; பகீர் கிளப்பும் பா.ஜ.க தலைவர்!

வழக்கமாக குளிர்காலத்தில்தான் இதுபோன்று காற்று மாசுபாடு பதிவாகும். ஆனால், இந்த ஆண்டு குளிர்காலம் தொடங்குவதற்கு முன்பே காற்று மாசுபாடு உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

இதையடுத்து, காற்று மாசுபாட்டை குறைப்பதற்காக வாகனங்களின் இயக்கத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது டெல்லி மாநில அரசு.

காற்று மாசுபாட்டிற்க்கு பாகிஸ்தான் தான் காரணம் ; பகீர் கிளப்பும் பா.ஜ.க தலைவர்!

இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் வினீத் அகர்வால் சர்தா இந்தியாவில் காற்றை மாசுபடுத்த பாகிஸ்தான், சீனா விஷ வாயுவை காற்றில் அனுப்பி இருக்கக்கூடும் எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மீரட்டில் கூறுகையில், நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் இந்தியாவில் காற்று மாசை ஏற்படுத்துவதற்காக காற்றில் விஷவாயுவை அனுப்பி இருக்ககூடும்.

பாகிஸ்தானில் இருந்து விஷ வாயு வருகிறதா என்பதை நாம் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பதவி ஏற்றதில் இருந்து பாகிஸ்தான் விரக்தியுடன் உள்ளது. எந்த ஒரு போரிலும் வெல்ல முடியாத நிலையில் இருக்கும் பாகிஸ்தான் ஏதேனும் தந்திரங்களை உபயோகிக்கக்கூடும் எனத் தெரிவித்தார்.

மேலும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட மக்கள் காற்று மாசுபாட்டுக்கு விவசாயிகள் வயல்களை எரிப்பதும் தொழிற்சாலைகள் கழிவுகளை வெளியேற்றுவதும் காரணம் என்று கூறுகிறார்கள். ஆனால் விவசாயி என்பவர் நம் நாட்டின் முதுகெலும்பாவார். எனவே விவசாயிகள் மீது குறை கூறக்கூடாது என்றும் வினீத் அகர்வால் கூறினார்.

banner

Related Stories

Related Stories