இந்தியா

மிகவும் மாசடைந்த நகரங்களில் முதலிடம் பெற்ற மோடியின் தொகுதி!

இந்தியாவில் மாசடைந்த நகரங்களில் பட்டியலில் பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதி முதலிடத்தில் உள்ளதாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

மிகவும் மாசடைந்த நகரங்களில் முதலிடம் பெற்ற மோடியின் தொகுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவின் மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியலை மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. அதில் மிகவும் மாசடைந்த நகரமாக காற்றின் தர அட்டவணையில் 276 புள்ளிகள் பெற்று உத்தர பிரதேச மாநிலத்தின் வாரணாசி முதலிடம் பெற்றுள்ளது.

வாரணாசி பிரதமர் மோடி இரண்டு முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியாகும். வாரணாசியை தொடர்ந்து லக்னோ இரண்டாவது இடத்தையும் முசாஃபர் நகர், ஹரியாணாவின் யமுனா நகர் 3,4 முறையே இடத்தில் உள்ளது.

மிகவும் மாசடைந்த நகரங்களில் முதலிடம் பெற்ற மோடியின் தொகுதி!

மேலும், தீபாவளி பண்டிகையின் போது வெடிக்கப்படும் பட்டாசு புகையால் வாரணாசி உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் மாசு அளவு மிக அபாய கட்டத்தை தாண்ட வாய்ப்புள்ளதாகவும் மாசுக்கப்பட்டு வாரியத்தை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் சுகாதாரத்தை வலியுறுத்தி வரும் பிரதமர் மோடியை இரண்டாவது முறையாக தேர்ந்தெடுத்த வாரணாசி நகரம் தொடர்ந்து மாசடைந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காற்றின் மாசு அளவு அதிகரித்துள்ள நிலையில் அதன் தீவிரத்தை குறைக்க விரைந்து பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories