இந்தியா

பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 4ஜி சேவை - மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 4ஜி உரிமம் வழங்க பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 4ஜி சேவை - மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின் பேட்டி அளித்த தொலைதொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், செய்தி ஒளிபரப்பு துறை அமிச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய அவர்கள், பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை சீரமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாகவும் அதற்காக 29,937 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் கூறினர். பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களை மூடப்போவதாக வரும் செய்திகளில் உண்மை கிடையாது. மாற்றாக, பி.எஸ்.என்.எல் - எம்.டி.என்.எல் இரண்டையும் இணைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 4ஜி சேவை - மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 4ஜி உரிமம் வழங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பி.எஸ்.என்.எல் மார்ச் 2020 இறுதிக்குள் 4 ஜி சேவைகளை அறிமுகப்படுத்த உள்ளது. பி.எஸ்.என்.எல்-லில் இருந்து விருப்ப ஓய்வு (VRS) பெறுவோருக்கு சிறப்பு பலன்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

பி.எஸ்.என்.எல் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காதது குறித்து பேசிய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தீபாவளிக்கு முன் நிலுவையில் உள்ள தொகைகள் வழங்கப்படும் என்று உறுதியளித்தார். இது இந்நிறுவனங்களின் ஊழியர்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும், பெட்ரோல் பங்குகள் குறிப்பிட்ட நிறுவனங்களின் பெட்ரோல், டீசலை விற்பதற்கு பதிலான அனைத்து நிறுவன பெட்ரோலியம் பொருள்களையும், எரிவாயு உள்ளிட்டவற்றையும் விற்க அனுமதி வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்தனர்.

banner

Related Stories

Related Stories