இந்தியா

பசுவதை பெயரில் வன்முறை ; வட மாநிலங்களில் குறைந்த பசு வளர்ப்பு : கால்நடை கணக்கெடுப்பில் தகவல்!

வட மாநிலங்களில் பசுக்களின் வளர்ப்பு குறைந்துவிட்டதாக கால்நடை கணக்கெடுப்பின் தெரியவந்துள்ளது.

பசுவதை  பெயரில்  வன்முறை ; வட மாநிலங்களில் குறைந்த பசு வளர்ப்பு : கால்நடை கணக்கெடுப்பில் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பசுவதை என்ற பெயரில் நடத்தப்படும் தாக்குதலால் ஏற்படும் அதிக உயிரிழப்பு காரணமாக உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களை பசு வளர்ப்பது குறைந்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்து பசுவின் பெயரில் தாக்குதல் நடத்தப்பட்டு பலர் உயிரிழந்திருக்கிறார்கள். இதனால் பசு வளர்ப்பதே ஆபத்தான தொழிலாக மாறிவிட்டது.

இதன் காரணமாக வடமாநிலங்களில் பசு வளர்ப்பது குறைந்துவிட்டதாக கால்நடை கணக்கெடுப்பு விவரங்கள் தெரிவிக்கின்றன.

பசுவதை  பெயரில்  வன்முறை ; வட மாநிலங்களில் குறைந்த பசு வளர்ப்பு : கால்நடை கணக்கெடுப்பில் தகவல்!

உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த 2012ம் ஆண்டில் 1 கோடியே 96 லட்சமாக இருந்த பசுக்களின் எண்ணிக்கை தற்போது 1 கோடியே 88 லட்சமாகவும், ஒடிசாவில் 15 சதவிகிகதமும், மகாராஷ்டிராவில் 10.7 சதவிகிதமும், மத்திய பிரதேசத்தில் 4.42 சதவிகிதகமாகவும் குறைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

பாஜக, ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்துத்துவா கும்பல் வன்முறையில் ஈடுபடுவதால் பசு வளர்ப்பு குறைந்துள்ளது. பசு வளர்ப்பையே தொழிலாக கொண்டவர்கள் இது போன்ற வன்முறைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories