இந்தியா

விண்ணில் பறக்கிறார் ‘மகாத்மா காந்தி’- ஏர் இந்தியா புகழாஞ்சலி!

மகாத்மா காந்தியின் 150வது பிறந்ததினத்தை முன்னிட்டு ஏர் இந்தியா A320 ரக விமானத்தில் மகாத்மா காந்தியின் உருவம் வரைந்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

விண்ணில் பறக்கிறார் ‘மகாத்மா காந்தி’- ஏர் இந்தியா புகழாஞ்சலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மகாத்மா காந்தியை நினைவுகூரும் விதமாக நாட்டின் பல்வேறு பகுதியில் அவரது புகைப்படக் கண்காட்சியும், காந்தியக் கொள்கைகளை எடுத்துச் சொல்லும் பாதயாத்திரை நிகழ்வுகளும், காந்தியத்தை வலியுறுத்தும் சொற்பொழிவுகளும் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒருபகுதியாக, டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான A320 ரக விமானத்தின் வால் பகுதியில் 11 அடி நீளம், 4.9 அடி அகலத்தில் மகாத்மா காந்தியின் உருவம் வரையப்பட்டு அவருக்கு புகழாஞ்சலி செலுத்தப்பட்டது.

banner

Related Stories

Related Stories