இந்தியா

இந்திய பொருளாதார வீழ்ச்சிக்கு ஆங்கிலேயர்களும், முகலாயர்களுமே காரணம் - யோகி ஆதித்யநாத்

முகலாயர்கள் மற்றும் ஆங்கிலேயர்களால் தான் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தது என உத்திரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

இந்திய பொருளாதார வீழ்ச்சிக்கு ஆங்கிலேயர்களும், முகலாயர்களுமே காரணம் - யோகி ஆதித்யநாத்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

மும்பையில் நடைபெற்ற உலக இந்து பொருளாதார மாநாட்டில் உத்திரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், "200 ஆண்டுகளுக்கு முன் உலகிலேயே பொருளாதார வளர்ச்சியில் முதன்மையாக திகழ்ந்தது இந்தியா. நம் பொருளாதார நிலை கண்டு உலகமே வியந்தது. முகலாயர்கள் இந்தியாவுக்கு வந்த நேரத்தில் உலகப் பொருளாதாரத்தில் மூன்றில் ஒரு பங்கை இந்தியா வைத்திருந்தது.

முகலாயர்கள் ஆட்சி காலத்தில் இந்தியா, உலக பொருளாதாரத்தில் 36 சதவீதம் வகித்திருந்தது. இவர்கள் வெளியேறி, பிரிட்டிஷ் வந்தபோது, இந்தியாவின் பங்கு 20 சதவீதமாகக் குறைந்து விட்டது.

ஆங்கிலேயர்களின் 200 ஆண்டு கால ஆட்சியின் போது இந்திய பொருளாதாரம் பலவீனப்படுத்தப்பட்டது. இந்திய பொருளாதாரத்தை சுரண்டியதே ஆங்கிலேயர்களும், முகலாயர்களும் தான்" எனக் கூறினார்.

இந்திய பொருளாதார வீழ்ச்சிக்கு ஆங்கிலேயர்களும், முகலாயர்களுமே காரணம் - யோகி ஆதித்யநாத்

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மக்களவை உறுப்பினர் ஓவைசி, எந்த ஒரு விஷயம் குறித்தும் தனக்கு எதுவும் தெரியாது என்பதை யோகி ஆதித்யநாத் நிரூபித்துள்ளார் என கூறியுள்ளார். மேலும், அவர் உத்தரப்பிரதேசத்தின் முதல்வராக இருப்பது அதிர்ஷ்டம் எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories