இந்தியா

பிஸ்கட் விற்பனை கடும் வீழ்ச்சி: நூற்றாண்டை நிறைவு செய்த பிரிட்டானியாவுக்கு மோடி அரசால் ஏற்பட்ட அவல நிலை!

நூற்றாண்டு கொண்டாட்டத்தை கொண்டாடி நிறைவு செய்வதற்குள் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது பிரிட்டானியா பிஸ்கட் நிறுவனம்.

பிஸ்கட் விற்பனை கடும் வீழ்ச்சி: நூற்றாண்டை நிறைவு செய்த பிரிட்டானியாவுக்கு மோடி அரசால் ஏற்பட்ட அவல நிலை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

1918ம் ஆண்டு தொடங்கப்பட்டது பிரிட்டானியா பிஸ்கட் கம்பெனி 2018ம் ஆண்டு தனது 100வது ஆண்டை நிறைவு செய்தது. நூறாவது ஆண்டு நிறைவடைந்ததையொட்டி அந்த விழாவை 3 மாதங்களுக்குக் கொண்டாடவும், முதலீட்டாளர்கள் - ஊழியர்களுக்கு போனஸ், புதிய லோகோ என பல கொண்டாட்டத் திட்டங்களை கொண்டிருந்தது பிரிட்டானியா நிறுவனம்.

ஆரம்ப காலத்தில் டைகர் பிஸ்கட், குட் டே, ரஸ்க் என தனது பிஸ்கட் ரகங்களை கொண்டிருந்த பிரிட்டானியா நிறுவனம் டயட் சார்ந்த பிஸ்கட்களான 50-50, மேரி கோல்டு, நியூட்ரி சாய்ஸ் போன்றவற்றை புதுமையான வகையில் உற்பத்தி செய்து விற்பனை செய்து வந்தது.

பிஸ்கட் விற்பனை கடும் வீழ்ச்சி: நூற்றாண்டை நிறைவு செய்த பிரிட்டானியாவுக்கு மோடி அரசால் ஏற்பட்ட அவல நிலை!

மேலும், மொத்த பிஸ்கட் விற்பனை பிரிவில் 75 %, இதர உணவு வகைகளில் 25% வருமானத்தையும் அடுத்த 5 ஆண்டுகளில் 50-50% ஆக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் இயக்குநர் வருண் பெர்ரி கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார்.

நாட்டிலேயே சுலபமான வகையில் அனைத்து தரப்பு மக்களையும் ஈர்க்கக் கூடிய வகையில் இயங்கி வந்த பிரிட்டானியா நிறுவனம் கடந்த ஆண்டு நூற்றாண்டை நிறைவு செய்த நிலையில், இந்த ஆண்டு இதே ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது.

இந்திய அளவில் விற்பனையில் முதலிடத்தில் இருந்தது பிரிட்டானியா பிஸ்கட் நிறுவனம். ஆண்டுக்கு 7-11% வரை உயர்ந்து வந்த பிரிட்டானியாவின் லாபம், தற்போது இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியால் அதலபாதாளத்துக்குச் சென்றுள்ளது.

வருண் பெர்ரி
வருண் பெர்ரி

மோடி அரசு மேற்கொண்ட தவறான பொருளாதாரக் கொள்கைகளாக ஜிஎஸ்டி வரி விதிப்பு, பணமதிப்பு நீக்கத்தால் ஆட்டோமொபைல் துறை கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்ததை அடுத்து உணவுத்துறையும் அந்த வரிசையில் இணைந்துள்ளது.

இதனால் பிரிட்டானியா நிறுவனம் 5 ரூபாய் மதிப்பிலான பிஸ்கட்டுகளை கூட விற்பனை செய்யமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஏனெனில், ஒட்டுமொத்த நுகர்வையும் பார்க்கையில் சிறிய தொகையாக இருந்தாலும் அது மிகப்பெரிய லாபத்தை ஈட்டும். ஆனால் தற்போது நிலவும் பொருளாதார சரிவால் 5 ரூபாய் பொருட்களுக்கான லாபத்தைக்கூட எட்டமுடியாத சூழலே உருவாகியுள்ளது என பிரிட்டானியாவின் வருண் பெர்ரி வேதனையுடன் தெரிவித்திருந்தார்.

பிஸ்கட் விற்பனை கடும் வீழ்ச்சி: நூற்றாண்டை நிறைவு செய்த பிரிட்டானியாவுக்கு மோடி அரசால் ஏற்பட்ட அவல நிலை!

மேலும், ஜிஎஸ்டி வரி விதிப்பும் அதிகமானதால் மூலப்பொருட்களை வாங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டதால் ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்படும் துயர நிலை உருவாகியுள்ளது.

100 ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடிய சில மாதங்களுக்குள்ளேயே பொருளாதார சரிவு பிரிட்டானியா நிறுவனத்தின் தலையில் இப்படி ஒரு பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டுள்ளது. இதே நிலைமை பல துறைகளைச் சார்ந்த நிறுவனங்களிலும் எதிரொலித்துள்ளது.

banner

Related Stories

Related Stories