இந்தியா

“கிரிமினல் வழக்கில் அசையா சொத்துகளை முடக்க, போலிஸாருக்கு அதிகாரமில்லை” - உச்சநீதிமன்றம் அதிரடி!

கிரிமினல் குற்ற வழக்கு விசாரணைகளில் அசையா சொத்துக்களை முடக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

“கிரிமினல் வழக்கில் அசையா சொத்துகளை முடக்க, போலிஸாருக்கு அதிகாரமில்லை” - உச்சநீதிமன்றம் அதிரடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கிரிமினல் வழக்குகளில் காவல்துறையினர் எந்த அசையா சொத்துகளையும் முடக்க அதிகாரம் கிடையாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 102ன் கீழ் எந்த அசையா சொத்தையும் காவல்துறையினர் கைப்பற்ற அதிகாரம் கிடையாது என ஏற்கெனவே மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த தீர்ப்புக்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு, உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருதா போஸ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, சிஆர்பிசி பிரிவு 102ன் கீழ் விசாரணையின் போது காவல்துறைக்கு குற்றவாளியின் அசையா சொத்துகளை முடக்குவதற்கு எந்த அதிகாரமும் கிடையாது என அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

banner

Related Stories

Related Stories