இந்தியா

“அச்சுறுத்தும் புதிய மோட்டார் வாகனச் சட்டம்” : நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்!

புதிய மோட்டார் வாகனச்சட்டத்திற்கு எதிராகவும் அபராதத் தொகையை குறைக்க வேண்டும் என்பன பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடுமுழுவதும் லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

“அச்சுறுத்தும் புதிய மோட்டார் வாகனச் சட்டம்” : நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

புதிய மோட்டார் வாகன சட்டப்படி, பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதிக அளவில் விபத்துகள் ஏற்படுவதால் அதனை கட்டுப்படுத்தவும், உயிரிழப்புகளை தடுக்கவும், பழைய சட்டத்தில் சில முக்கிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கான திருத்த மசோதா, அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, 2019 மோட்டார் வாகனச் சட்டத் திருத்தத்தில் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் 3 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், லைசென்ஸ் காலாவதியாகிவிட்டால் ஒரு மாதத்திற்குள் புதுப்பிக்க வேண்டும் என்ற நடைமுறை ஒரு ஆண்டாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், போக்குவரத்து விதிகளை மீறும் நபருக்கு அபராதக் கட்டணம் முன்பு இருந்ததைவிட பன்மடங்கு அபராதம் விதிப்பது போன்றவை புதிய மோட்டார் வாகனச் சட்டத்திருத்தத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும், அபாராதம் என்றபெயரில் ஒரு லட்சம் வரையும் வசூலிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே பா.ஜ.க அரசு கொண்டு வந்துள்ள புதிய மோட்டார் வாகனச் சட்டத்திற்கு எதிராகவும் அபராதத்தொகையை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் நாடுமுழுவதும் லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

“அச்சுறுத்தும் புதிய மோட்டார் வாகனச் சட்டம்” : நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்!

இந்த வேலைநிறுத்த போராட்டத்தை அனைத்திந்திய மோட்டார்டிரான்ஸ் போர்ட் காங்கிரஸ் அறிவித்துள்ளது. இந்த போராட்டத்திற்கு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து லாரி உரிமையாளர் ஒருவர் கூறுகையில், “சாலை விதிமுறை மீறல்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், செப்டம்பர் ஆகிய மாதங்களில் தமிழகத்தில் உள்ள 43 சுங்கச்சாவடிகளில் 10 சதவீதம் சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது.

இதனால் லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதை ரத்து செய்ய வேண்டும். வேலைநிறுத்தப் போராட்டத்தில் இந்தியா முழுவதும் 45 லட்சம் லாரிகளும் தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகளும் ஓடாது” என்று அவர் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories