இந்தியா

சிதறும் பொருளாதாரம் : தொழிற்துறை உற்பத்தி வளர்ச்சி 4.3% மட்டுமே - உண்மையைப் ஒப்புக்கொண்ட மோடி அரசு !

உற்பத்தித் துறையில் ஏற்பட்டுள்ள மந்தநிலை காரணமாகத் தொழிற்துறை உற்பத்தி 4.3 சதவிகிதமாகக் குறைந்து விட்டதாக, மத்திய அரசே தனது புள்ளிவிவர அறிக்கையில் ஒப்புக்கொண்டுள்ளது.

சிதறும் பொருளாதாரம் : தொழிற்துறை உற்பத்தி வளர்ச்சி 4.3% மட்டுமே - உண்மையைப் ஒப்புக்கொண்ட மோடி அரசு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
premjourn
Updated on

இந்திய பொருளாதாரம் கடும் தேக்க நிலையைச் சந்தித்து வருகிறது. ஆட்டோமொபைல் நிறுவனங்களின் வீழ்ச்சி, பல்வேறு தொழில்களின் நசிவு, உற்பத்தி நிறுத்தம், தொழிலாளர் வேலையிழப்பு ஆகியவை பொருளாதார வீழ்ச்சியை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளன.

மேலும், நடப்பு நிதி ஆண்டின் முதலாவது காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) கடும் சரிவைச் சந்தித்துள்ளது. 5.8% என்ற அளவில் இருந்து 5 சதவீதமாக ஜி.டி.பி சரிவைச் சந்தித்துள்ளது. மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி மரண அடி வாங்கியுள்ளது.

இந்நிலையில், உற்பத்தித் துறையில் ஏற்பட்டுள்ள மந்தநிலை காரணமாக தொழிற்துறை உற்பத்தி ஜூலை மாதத்தில் 4.3 சதவிகித மாகக் குறைந்து விட்டதாக, மத்திய அரசே தனது புள்ளிவிவர அறிக்கையில் ஒப்புக்கொண்டுள்ளது.

மத்திய புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்கப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில், “ நடப்பாண்டு 2019 ஏப்ரல் முதல் ஜூன் மாதத்தில் தொழிற்துறை உற்பத்தி 3.3 சதவிகிதம் என்ற விகிதத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது.

சிதறும் பொருளாதாரம் : தொழிற்துறை உற்பத்தி வளர்ச்சி 4.3% மட்டுமே - உண்மையைப் ஒப்புக்கொண்ட மோடி அரசு !

ஆனால், இது கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தில் 5.4 சதவிகிதம் என்ற அளவிற்கு இருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல, கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 7 சதவிகிதமாக இருந்த தொழிற்துறை உற்பத்தி வளர்ச்சி 2019 ஜூலையில் 4.2 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

குறிப்பாக காகிதம் மற்றும் காகித உற்பத்தித் தொழிற்சாலை, மோட்டார் வாகனங்கள், ட்ரெய்லர் மற்றும் வாகன உற்பத்திப் பிரிவு, பிரிண்டிங் மற்றும் ரெக்கார்டட் மீடியா, மறு உற்பத்தித் துறை ஆகியவற்றிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட உற்பத்தித் துறையில் 23 தொழிற்துறை குழுமங்களில் 13-ல் மட்டுமே வளர்ச்சி காணப்படுகிறது.

உணவுப்பொருள் உற்பத்தி தொழிற்துறை 23.4 சதவிகிதம் வளர்ச்சியும் அடிப்படை உலோக உற்பத்தி 17.3 சதவிகிதமும், ஆயத்த ஆடைத் தயாரிப்பு 15 சதவிகிதமும் வளர்ச்சியில் உள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories