இந்தியா

அம்பானி குடும்பத்தினருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியதாக பரபரப்பு... அம்பானி குடும்பம் மறுப்பு!

கருப்புப் பண தடுப்பு சட்டத்தின் கீழ் தொழிலதிபர் முகேஷ் அம்பானி குடும்பத்திற்கு வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

அம்பானி குடும்பத்தினருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியதாக பரபரப்பு... அம்பானி குடும்பம் மறுப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானியின் குடும்பத்திற்கு வருமான வரித்துறையினர் கடந்த மார்ச் மாதம் நோட்டீஸ் அனுப்பியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. கணக்கில் வராத வெளிநாட்டு வருவாய் மற்றும் சொத்துக்கள் குறித்து விளக்கம் கேட்டு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

2011ம் ஆண்டு ஜெனிவாவில் வங்கிக்கணக்கு வைத்திருந்த இந்தியர்கள் மற்றும் இந்திய நிறுவனங்கள் குறித்து கிடைத்த விவரங்களின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். பல்வேறு நாடுகளில் உள்ள விசாரணை அமைப்புகள் மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில், வருமான வரித்துறையினர் முகேஷ் அம்பானியின் குடும்பத்திற்கு இந்த நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது.

கருப்பு பண தடுப்பு சட்டத்தின் கீழ் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீட்டா அம்பானி மற்றும் அவரது 3 பிள்ளைகளுக்கும் கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

அந்த நோட்டீஸில், பிரிட்டிஷ் வர்ஜின் தீவுகளை அடிப்படையாக கொண்ட கேப்பிடல் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட் மற்றும் அதன் கீழ் வரும் நிறுவனமான, கேமேன் தீவுகளை அடிப்படையாக கொண்ட உள்கட்டமைப்பு நிறுவனம் ஆகியவற்றில் உள்ள தொடர்புகளையும், இருப்புகளையும் வெளியிட அம்பானி குழுமம் தவறிவிட்டது. வெளிநாட்டு வருவாய் மற்றும் சொத்துகள் தொடர்பான விவரங்களை தெரிவிக்கும்படி அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், தங்களுக்கு எந்தவிதமான நோட்டீஸும் வரவில்லை ரிலையன்ஸ் நிறுவனம் மறுப்புத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories