இந்தியா

பெஹ்லுகான் வழக்கை தொடர்ந்து தப்ரெஸ் அன்சாரி வழக்கிலும் குற்றவாளிகள் விடுவிப்பு? - நீதியை யாரிடம் கேட்பது!

கும்பல் தாக்குதலில் தப்ரேஸ் அன்சாரி இறக்கவில்லை என்று, ஜார்க்கண்ட் போலிஸார் தெரிவித்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெஹ்லுகான் வழக்கை தொடர்ந்து தப்ரெஸ் அன்சாரி வழக்கிலும் குற்றவாளிகள் விடுவிப்பு? - நீதியை யாரிடம் கேட்பது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பா.ஜ.க ஆட்சியில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெறும் கும்பல் படுகொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதில் சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்கள் மீதுதான் அதிக அளவில் தாக்குதல் அரங்கேறுகிறது. இதை தடுக்கவேண்டிய மத்திய பா.ஜ.க அரசோ கைகட்டி வேடிக்கை பார்க்கிறது.

ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த ஜூன் 18-ம் தேதி 22 வயதான தப்ரேஸ் அன்சாரி என்ற இளைஞரை இந்துத்வா கும்பல் கடுமையாகத் தாக்கியது. கடுமையான காயங்கள் ஏற்பட்டதால், ஜூன் 22ம் தேதி சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

இதனையடுத்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய 11 பேர் கைது செய்யப்பட்டதுடன், 2 போலிஸாரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அந்த 11 பேர் மீதும், கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், தப்ரெஸ் அன்சாரியின் மரணம் குறித்து விசாரிக்க ஐந்து பேர் கொண்ட மருத்துவ குழு அமைக்கப்பட்டது. அந்த குழு தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், அன்சாரி மாரடைப்பால் காரணமாக இறந்துவிட்டதாக கூறியுள்ளது. மேலும் அந்த அந்த அறிக்கையில், மண்டை ஓட்டில் பிளவு மற்றும் எலும்பு முறிவு, வெளிப்புற உறுப்புகள் மற்றும் அவரது இதய அறைகளில் இரத்த கசுவு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

பெஹ்லுகான் வழக்கை தொடர்ந்து தப்ரெஸ் அன்சாரி வழக்கிலும் குற்றவாளிகள் விடுவிப்பு? - நீதியை யாரிடம் கேட்பது!

அவரின் மரணம் குறித்து விசாரித்த மருத்துவகுழு மருத்துவர் ஒருவர் கூறுகையில், தப்ரேஸ் அன்சாரிக்கு அடிபட்டப்போது மட்டை ஓட்டில் எந்த வித சிகிச்சையும் மேற்கொள்ளப்படவில்லை. பாதிப்பு உள்ளதை பிரேத பரிசோதனையின் போதுதான் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும், தாக்குதலுக்கு அடுத்த நாள் தப்ரேஸை சோதனைக்கு அழைத்துச் சென்றபோது,

அவர் காலில் மட்டுமே வலி இருப்பதாக கூறியுள்ளார். தலையில் ஏற்பட்ட காயம் குறித்து எதுவும் கூறவில்லை. அதனால்தான் அவர் காலில் இருந்த எழும்பு முறிவுக்கு மட்டும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், மருத்துவகுழு அறிக்கையை கொண்டு தற்போது குற்றவாளிகள் 11 பேர் மீதான கொலை வழக்கு பிரிவுகள் கைவிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஜார்க்கண்ட் போலிஸார், .“பிரேத பரிசோதனையில் தப்ரேஸ் அன்சாரி மாரடைப்பால் இறந்தார் என கூறப்பட்டுள்ளது. இதனையடுத்தே கொலை வழக்கு பிரிவுகள் கைவிடப்பட்டுள்ளன”, என்று கூறியுள்ளனர்.

பெஹ்லுகான் வழக்கை தொடர்ந்து தப்ரெஸ் அன்சாரி வழக்கிலும் குற்றவாளிகள் விடுவிப்பு? - நீதியை யாரிடம் கேட்பது!

ஜார்கண்ட் மாநில போலிஸாரிம் இந்த பதில், மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், “மருத்துவக்குழு உடல்கூராய்வு அறிக்கை வெளியிட்ட நிலையில் அதை வைத்து கொலைக் குற்றச்சாட்டை திரும்பப் பெற்றுள்ளது ஜார்கண்ட் மாநில போலிஸ். ராஜஸ்தானில் இந்துத்துவா கும்பலால் அடித்துக்கொல்லப்பட்ட பெஹ்லுகான் வழக்கிலும் அவர் மாரடைப்பால் இறந்ததாகக் கூறிய உடல்கூராய்வு அறிக்கையின் அடிப்படையிலேயே குற்றவாளிகளை நீதிமன்றம் விடுவித்தது.

அந்த வழக்கிலாவது கொலைக் கும்பல் நீதிமன்றம் வரை சென்றது, ஆனால் அன்சாரி வழக்கில் அதையும்கூட செய்யாமல் ஆரம்பத்திலேயே ஜார்க்கண்ட் போலிஸார் ‘தீர்ப்பு’ வழங்கியுள்ளனர்.

கும்பல் கொலையின் நியதிப்படியே அனைத்தும் நடக்கிறது. காவல்துறை, நீதிமன்றம், அரசாங்கம் அனைத்துமே கும்பல் கொலைகளில் கூட்டாளிகளாக இருக்கும்போது நீதியை யாரிடம் கேட்பது?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

banner

Related Stories

Related Stories