இந்தியா

இஸ்ரோவுக்கு உறுதுணை: லேண்டருக்கு ‘ஹலோ மெசேஜ்’ அனுப்பிய நாசா!

நிலவின் மேற்பரப்பில் அசைவில்லாமல் இருக்கும் விக்ரம் லேண்டருக்கு நாசா விஞ்ஞானிகள் ஹலோ மெசேஜ் அனுப்பியுள்ளனர்.

இஸ்ரோவுக்கு உறுதுணை: லேண்டருக்கு  ‘ஹலோ மெசேஜ்’ அனுப்பிய நாசா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நிலவின் மேற்பரப்பில், ஹாட் லேண்டிங் முறையில் தரையிறங்கியுள்ள சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டரில் இருந்து தகவல் தொடர்பை பெரும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இரவு, பகல் பாராமல் இதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் முனைப்புடன் பணியாற்றி வருகின்றனர். லேண்டருடன் இணைப்பை உருவாக்கும் முயற்சியில் இந்தியாவுக்கு துணையாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவும் இறங்கியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, விக்ரம் லேண்டருக்கு நாசா விஞ்ஞானிகள் ஹலோ என குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளனர். ரேடியோ அதிர்வெண்கள் மூலம் விக்ரம் லேண்டரை தொடர்புகொள்ளும் முயற்சியில் நாசா ஈடுபட்டுள்ளது.

இஸ்ரோவின் ஒப்புதலுடன் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. மேலும், செப்.,20, 21 தேதிகளுக்குள் விக்ரம் லேண்டரை தொடர்புகொள்ள முடியும் எனவும் நாசா விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories