இந்தியா

கடும் வீழ்ச்சியில் ஆட்டோமொபைல் துறை : உற்பத்தியை நிறுத்துவதாக அசோக் லேலண்ட் நிறுவனம் அறிவிப்பு!

அசோக் லேலண்ட் நிறுவனம் சென்னை எண்ணூர் ஆலையில் 16 நாட்களுக்கு உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இதனால் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் உருவாகியுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

இந்திய தொழில் துறையில் மிக முக்கிய பங்கு வகிப்பது ஆட்டோமொபைல் உற்பத்தி மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பு துறை. இந்தத் துறையில் மட்டும் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை பார்ப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2017ம் ஆண்டு ஆட்டோமொபைல் நிறுவனப் பங்குகள் வளர்ச்சியை நோக்கி நகர்ந்தன. ஆனால் 2018ம் ஆண்டில் வளர்ச்சி விகிதம் வெகுவாகக் குறைந்தது.

அதனால் புதிய முதலீடுகள் அனைத்தும் எலெக்ட்ரிக் வாகனத் திட்டங்களில் மட்டுமே இருக்கவேண்டும் என மறைமுக அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனால் ஆட்டோமொபைல் துறையில் கடந்த சில நாட்களாக மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது.

மிகக் குறுகிய காலகட்டத்திலேயே சுசூகி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவன பங்குகள் 20 சதவீத அளவிற்கு குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் நடப்பு நிதியாண்டில் 18.4 சதவீத அளவிற்கு வாகன விற்பனை எண்ணிக்கை குறைந்துவிட்டதாகவும் இது முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கான வர்த்தக பேரிழப்பு எனவும் பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

கடும் வீழ்ச்சியில் ஆட்டோமொபைல் துறை : உற்பத்தியை நிறுத்துவதாக அசோக் லேலண்ட் நிறுவனம் அறிவிப்பு!

இந்நிலையில், அசோக் லேலண்ட் நிறுவனம் தமிழகத்தில் உள்ள எண்ணூர் மற்றும் ஓசூர் நிறுவனங்களில் உற்பத்தி நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. சென்னை எண்ணூரில் செயல்பட்டுவரும் தொழிற்சாலையில் 16 நாட்கள் வாகன உற்பத்தி நிறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளது.

அதே போல் ஓசூரில் உள்ள நிறுவனத்தில் 5 நாட்கள் வாகன உற்பத்தி நிறுத்தம் செய்யப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் அந்நிறுவனங்களில் பணியில் உள்ள ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ராஜஸ்தான், பந்த்ரா, மும்பை உள்ளிட்ட பகுதிகளிலும் உற்பத்தியை நிறுத்துவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அசோக் லேலண்ட் நிறுவனம் ஏற்கனவே கடந்த 5ம் தேதி முதல் 9 -ம் தேதி வரை தொழிலாளர்களுக்கு கட்டாய விடுப்பு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories