இந்தியா

இஸ்ரோவிற்கு குவியும் பாராட்டுகள் : “இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறோம்” நாசா அறிவிப்பு!

நிலவின் தென் துருவத்தை அடைய முயற்சி செய்த இஸ்ரோவிற்கு அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவும், ஆஸ்திரேலிய விண்வெளி ஆராய்ச்சி மையமும் பாராட்டியுள்ளது.

இஸ்ரோவிற்கு குவியும் பாராட்டுகள் : “இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறோம்” நாசா அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நிலவின் தென் துருவத்தின் கடினமான பகுதியில் ஆய்வு செய்வதென்பது சாதாரண நிகழ்வு அல்ல. நிலவுக்கு விண்கலத்தை அனுப்பியதில் வேண்டுமானால் இந்தியா 4வது இடத்தில் இருக்கலாம். ஆனால் அதன் தென் துருவப்பகுதிக்கு விண்கலத்தை அனுப்பிய முதல் நாடு இந்தியாதான்.

ஆதலால், நிலவில் சந்திரயான் 2 விக்ரம் லேண்டர் தரையிறங்கும் நிகழ்வு நாடு முழுவதும் மட்டுமன்றி, சர்வதேச நாடுகளாலும் உற்றுநோக்கப்பட்டது. இருப்பினும் நிலவை நெருங்கும் சமயத்தில் சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் லேண்டரின் நிலை குறித்து அறியமுடியாமல் போனதாக இஸ்ரோ அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொதுமக்கள், அரசியல் கட்சியினர், தலைவர்கள் என பலரும் இஸ்ரோவின் முயற்சிக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா ட்விட்டரில் பாராட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து நாசா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “விண்வெளி ஆய்வு மிகவும் கடினமானது. நிலவின் தென் பகுதியில் ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான் 2 திட்ட முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள். எதிர்கால திட்டங்களில் உங்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறோம்” என பதிவிட்டுள்ளது.

இதே போல் இஸ்ரோவின் முயற்சிகளுக்கும், அர்ப்பணிப்புக்கும் ஆஸ்திரேலிய விண்வெளி ஆராய்ச்சி மையமும் பாராட்டியுள்ளது. விக்ரம் லேண்டர் நிலவுக்கு சில கிலோ மீட்டர் தொலைவில் இருந்ததை சுட்டிக்காட்டியுள்ள ஆஸ்திரேலியா, இஸ்ரோவின் ஆய்வுகள் தொடர வாழ்த்து கூறியுள்ளது. இஸ்ரோவின் முயற்சிக்கு ஐக்கிய அரபு அமீரகம் உறுதுணையாக இருக்கும் என அந்நாட்டின் விண்வெளி ஆய்வு மையம் கூறியுள்ளது.

banner

Related Stories

Related Stories