இந்தியா

லேண்டரின் சிக்னல் கிடைக்காததால் அழுத இஸ்ரோ சிவன்: கட்டியணைத்து ஆறுதல் கூறிய பிரதமர் மோடி (வீடியோ)

சந்திரயான் 2 திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வரும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

லேண்டரின் சிக்னல் கிடைக்காததால் அழுத இஸ்ரோ சிவன்: கட்டியணைத்து ஆறுதல் கூறிய பிரதமர் மோடி (வீடியோ)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இஸ்ரோ விஞ்ஞானிகளின் உழைப்பைக் கண்டு நாடு பெருமை கொள்கிறது என பிரதமர் மோடி பாராட்டுத் தெரிவித்தார். நம்பிக்கையுடனும், கடின உழைப்புடன் விண்வெளி ஆராய்ச்சிகளை தொடர்ந்து மேற்கொள்வோம் என விஞ்ஞானிகளை அவர் ஊக்கப்படுத்தினார்.

சந்திரயான் 2 விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் நிகழ்வை நேரில் காண டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பெங்களூருவுக்கு வந்தார் பிரதமர் மோடி. லேண்டர் தரையிறங்கும் நிகழ்வை இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் அமர்ந்து பிரதமர் மோடி பார்வையிட்டார். ஆனால், நிலவை நெருங்கும் கடைசி நேரத்தில், 2.1 கி.மீ தொலைவில் இருக்கும் போது லேண்டரின் சிக்னல் கிடைக்காததால் இஸ்ரோ விஞ்ஞானிகள் உற்சாகத்தை இழந்தனர்.

அப்போது இஸ்ரோ தலைவர் சிவன் உட்பட, பலரை கட்டியணைத்தும், முதுகில் தட்டியும் பிரதமர் மோடி பாராட்டுத் தெரிவித்தார். ஏற்றத்தாழ்வுகள் இருக்கத்தான் செய்யும். நம்பிக்கையுடன் இருங்கள் என பிரமர் மோடி விஞ்ஞானிகளுக்கு நம்பிக்கையூட்டினார்.

சந்திரயான் 2 திட்டம் மிகச்சிறிய சாதனை அல்ல. இஸ்ரோ விஞ்ஞானிகளை கண்டு தற்போது நாடே பெருமை கொள்கிறது. நாட்டுக்கும், அறிவியலுக்கும். நாட்டு மக்களுக்கும் மிகப்பெரிய சேவையை செய்திருக்கிறீர்கள்.

நான் எப்போதும் உங்களுடன் இருக்கிறேன். தைரியமாக முன்னேறுங்கள் எனக் கூறி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்.

இதன் பிறகு, விக்ரம் லேண்டரின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதை அடுத்து கண்ணீர் விட்டு அழுத இஸ்ரோ தலைவர் சிவனை கட்டியணைத்து பிரதமர் மோடி தேற்றினார். இந்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories