இந்தியா

டெலிவரி சேவைகளை மொத்தமாக கையில் எடுத்த ஸ்விகி - பிரம்மாண்ட திட்டத்துடன் களம் இறங்குகிறது!

உணவு டெலிவரியைத் தாண்டி புதிய டெலிவரி சேவையை தொடங்கியுள்ளது ஸ்விகி நிறுவனம்.

டெலிவரி சேவைகளை மொத்தமாக கையில் எடுத்த ஸ்விகி - பிரம்மாண்ட திட்டத்துடன் களம் இறங்குகிறது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உணவு டெலிவரியில் கொடிகட்டி பறந்து வரும் ஸ்விகி நிறுவனம், தற்போது புதிதாக ஸ்விகி 'Go' என்ற சேவையை அறிமுகப்படுத்தவுள்ளது.

சின்ன சின்ன வேலைகளான பார்சல் அனுப்புவது, பொருட்களை உரிய இடத்தில் கொண்டு சேர்ப்பது, அலுவலகத்தில் இருப்பவர்களுக்கு உணவு கொடுத்து விடுதல் என பல சேவைகளை இந்த ஸ்விகி கோ மூலம் பயனாளர்கள் செய்துக்கொள்ளலாம்.

இதுமட்டுமல்லாமல், வீட்டுக்குத் தேவையான அனைத்து விதமான மளிகைப் பொருட்களையும், மருந்து போன்றவற்றையும் டெலிவரி செய்யும் வகையில் ஸ்விகி ஸ்டோர்ஸ் என்ற சேவையையும் ஸ்விகி நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

டெலிவரி சேவைகளை மொத்தமாக கையில் எடுத்த ஸ்விகி - பிரம்மாண்ட திட்டத்துடன் களம் இறங்குகிறது!

நாட்டின் மிகப்பெரிய மெட்ரோ நகரங்களில் ஒன்றான பெங்களூருவில் இந்த சேவைகளை முதலில் அறிமுகம் செய்த பின்னர், அடுத்த ஆண்டுக்குள் 300 நகரங்களில் விரிவுபடுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் பல்வேறு பகுதிகளில் டப்பா வாலா என்ற சேவை ஏற்கனேவே உள்ளது. அந்த நகரத்தில் ஸ்விகி Go சேவை வந்தால் டப்பா வாலாக்களுக்கு இடையூறாக அமைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இருப்பினும், பிற நகரங்களில் வேலைவாய்ப்பில்லாமல் உள்ள இளைஞர்களுக்கு ஸ்விகி GO போன்ற சேவைகளின் மூலம் வேலை வாய்ப்பு கிடைக்க உதவும் எனவும் பேசப்படுகிறது.

banner

Related Stories

Related Stories