இந்தியா

நிதி நெருக்கடியால் திணறும் தொலைதொடர்புத்துறை : 80,000 பி.எஸ்.என்.எல் ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு!

நிர்வாக செலவுகளை குறைப்பதற்காக 80 ஆயிரம் ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வளிக்க பி.எஸ்.என்.எல். நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்.

நிதி நெருக்கடியால் திணறும் தொலைதொடர்புத்துறை : 80,000 பி.எஸ்.என்.எல் ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தொலைத்தொடர்பு துறையில் அம்பானியின் ஜியோ நிறுவனம் அசுர வளர்ச்சியை எட்டியதால், பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனம் 4ஜி சேவையை கொடுப்பதில் திணறி வருகிறது. கடும் நிதி நெருக்கடியில் அந்நிறுவனம் சிக்கி தவித்து வருகிறது.

இதனையடுத்து, பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு சொந்தமான நிலங்களை வாடகைக்கும், குத்தகைக்கும் விட்டு வருமானத்தை ஈட்ட திட்டமிட்டுள்ளது.

பி.எஸ்.என்.எல்-க்கு சொந்தமான 68 ஆயிரம் கோபுரங்களில் 13 முதல் 14 ஆயிரம் கோபுரங்கள் மற்ற நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ள நிலையில், மேலும் சில கோபுரங்களை குத்தகைக்கு விடவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ள பி.எஸ்.என்.எல். நிறுவனம் நிர்வாக செலவுகளை குறைப்பதற்காக 70 முதல் 80 ஆயிரம் ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வளிக்க திட்டமிட்டு இதற்கான பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவைப்பட்டால் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், நிறுவனத்தின் மின்சார பயன்பாட்டுக்கு மட்டும் 2,700 கோடி செலவிடவுள்ளதால் அதன் பயன்பாட்டையும் 15% குறைக்க பி.எஸ்.என்.எல். திட்டமிட்டுள்ளது.

தனியாருக்கு பொதுத்துறை நிறுவனங்களை தாரை வார்ப்பதையே மத்திய அரசு குறியாகக் கொண்டுள்ள நிலையில், பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வளிக்கும் முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories