இந்தியா

பயங்கரமாக வைரலான ‘Moon Walk’ வீடியோ : சாலையை சரிசெய்யும் பணிகளைத் தொடங்கிய அதிகாரிகள்!

பெங்களூருவில் குண்டும் குழியுமாக இருந்த சாலையை கிண்டல் செய்து வெளியிடப்பட்ட ‘மூன் வாக்’ வீடியோ வைரலானதையடுத்து, அந்தச் சாலையை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

பயங்கரமாக வைரலான ‘Moon Walk’ வீடியோ : சாலையை சரிசெய்யும் பணிகளைத் தொடங்கிய அதிகாரிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

பெங்களூருவின் யஷ்வந்த்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட ஹீரோஹலி, துங்கநகர், விஷ்வனீதம் போன்ற பல பகுதிகளில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பது குறித்து பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்தும், மாநகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், சேதமடைந்துள்ள சாலையை சீர்செய்யக் கோரி பெங்களூருவைச் சேர்ந்த 3D ஓவியர் பாதல் நஞ்சுண்டசுவாமி என்பவர் விண்வெளி வீரர் உடை அணிந்து வந்து சாலையில் நடந்து செல்வது போல வீடியோ ஒன்றை உருவாக்கி அதனை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோ பலரால் பகிரப்பட்டது.

அந்த வீடியோ வைரலாகி, மாநகராட்சி நிர்வாகத்தை பலரும் கண்டித்த நிலையில், துங்கநகரில் சாலை மேம்பாட்டுப்பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு ஓவியர் பாதல் நஞ்சுண்டசுவாமி நன்றி தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories