இந்தியா

உ.பியில் நகைக்கடை உரிமையாளரை துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்: அதிர வைக்கும் சிசிடிவி காட்சி!

இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் நகைக்கடை உரிமையாளரை துப்பாக்கியால சுட்டுத் தாக்கியுள்ளார் பக்கத்து வீட்டுக்காரர். உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்.

உ.பியில் நகைக்கடை உரிமையாளரை துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்: அதிர வைக்கும் சிசிடிவி காட்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாட்டிலேயே நாளுக்கு நாள் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வரும் மாநிலமாக அனைவராலும் கருதப்படுவது உத்தர பிரதேசம்தான். அம்மாநிலத்தில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக குற்றச்செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என இது போன்ற குற்றச்செயல்கள் சில நேரங்களில் ஆட்சி, அதிகாரத்தில் இருப்பவர்களே ஈடுபட்டு வருவதால் அம்மாநில மக்களுக்கு அதிருப்தி மட்டுமல்லாமல் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அவ்வகையில், உத்தரபிரதேசத்தில் முசாபர்நகரில் உள்ள சிவில் லேன் பகுதியில் நகைக்கடை ஒன்று அமைந்துள்ளது. இந்த நகைக் கடையின் உரிமையாளருக்கும், பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கும் இடையே வெகு நாட்களாக மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று தனது இரண்டு மகன்களுடன் நகைக்கடைக்குச் சென்ற பக்கத்து வீட்டுக்காரர், அங்கிருந்த பொருட்களை தூக்கி எறிந்தும், உடைத்தும் அங்குள்ளவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதன் பின்னர், உட்புகுந்த அந்த நபர், நகைக்கடை உரிமையாளர் மீது துப்பாக்கியால் சுட்டு தாக்கியுள்ளார். அப்போது நகைக்கடை உரிமையாளரை காப்பாற்ற வந்த பெண்ணும் காயமடைந்தார்.இந்த சம்பவத்தில் 3 பேர் காயமடைந்துள்ளனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த போலிஸார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நகைக்கடை உரிமையாளர் மீது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் துப்பாக்கிச் சூடு நடத்திய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories