இந்தியா

அயோத்தி வழக்கு : முஸ்லிம்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞருக்கு சென்னையை சேர்ந்த பேராசிரியர் மிரட்டல்!

அயோத்யா வழக்கில் முஸ்லீம் மனுதார்களுக்கு ஆஜராகி வரும் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞருக்கு சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த பேராசிரியர் சண்முகம் மிரட்டல் விடுத்துள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Bala Vengatesh
Updated on

அயோத்யா வழக்கில் விசாரணையில் வக்ஃபு வாரியத்திற்காக மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான் வாதிட்டுவருகிறார். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இஸ்லாமிய மனுதார்களுக்காக தொடர்ந்து வாதாடினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்ற மிரட்டல் கடிதம் ஒன்று தவானுக்கு வந்துள்ளது. சென்னையைச் சேர்ந்த பேராசிரியர் சண்முகம் என்பவர் இந்த மிரட்டல் கடிதத்தை எழுதியுள்ளது தெரிய வந்துள்ளது.

அந்த கடிதத்தில், '' எவ்வாறு ஒரு நபர் தனது மனசாட்சியை அடமானம் வைத்து ராமனை எதிர்த்து முஸ்லிம்களுக்கு ஆதரவாக வாதிட முடியும். இந்துக்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள். நான் இதுவரை என் வாயால் காயத்ரி மந்திரத்தை 50 லட்சம் முறை உச்சரித்துள்ளேன். அந்த வாயால் உங்களை நான் சபிக்கிறேன்'' என அந்த கடிதத்தில் எழுதியுள்ளார் சண்முகம்.

அயோத்தி வழக்கு : முஸ்லிம்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞருக்கு சென்னையை சேர்ந்த பேராசிரியர் மிரட்டல்!

இதனைத் தொடர்ந்து அரசியல் சாசன அமர்வு விசாரித்துவரும் வழக்கில் ஆஜராகும் தன்னை இது போன்று மிரட்டுவது என்பது நீதிமன்ற அவமதிப்பு குற்றம் என்று குறிப்பிட்டு சண்முகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி ராஜிவ் தவான் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

உச்சநீதிமன்றமே தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராஜிவ் தவான் அந்த மனுவில் கோரியுள்ளார். மேலும், இது போன்று சஞ்சய் கலால் பஜ்ரங்கி என்பவரும் வாட்ஸ் ஆப் மூலம் தன்னை மிரட்டியதாகவும் அந்த மனுவில் ராஜிவ் தவான் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories