இந்தியா

ரயில் நிலையங்களில் வாழைப்பழம் விற்கத் தடை : பா.ஜ.க அரசின் ’தூய்மை இந்தியா’ திட்டம் காரணமா ?

லக்னோவில் உள்ள சார்பாக் ரயில் நிலையத்தில் வாழைப்பழத்தை விற்க ரயில்வே அதிகாரிகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலையங்களில் வாழைப்பழம் விற்கத் தடை : பா.ஜ.க அரசின் ’தூய்மை இந்தியா’ திட்டம் காரணமா ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோ சார்பாக் ரயில் நிலையத்தில் வாழைப்பழத்தை விற்க ரயில்வே அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். தடை மீறி எவரேனும் வாழைப்பழத்தை விற்பனை செய்தால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.

சார்பாக் ரயில் நிலையம் முழுவதும் அசுத்தமாக இருப்பதாலேயே வாழைப்பழங்களை விற்கத் தடை விதித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த அறிவிப்பினால் சிறு வியாபாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ரயில் நிலையங்களில் வாழைப்பழம் விற்கத் தடை : பா.ஜ.க அரசின் ’தூய்மை இந்தியா’ திட்டம் காரணமா ?

ஆப்பிள், மாதுளை போன்ற பழங்களை விட மலிவான விலையில் விற்கப்படும் வாழைப்பழங்கள் அசுத்தத்துக்குக் காரணமாகும் என ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்திருப்பது பயணிகளிடையே முகம் சுளிக்க வைத்துள்ளது.

ஏனெனில், ரயில் நிலையங்களில் விற்கப்படும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை காட்டிலும் வாழைப்பழம் உடலுக்கு மட்டுமல்லாமல் சுற்றுப்புறத்துக்கும் நன்மை பயக்கும் வகையில் மக்கும் தன்மைக் கொண்டது என கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ரயில் நிலையங்களில் வாழைப்பழம் விற்கத் தடை : பா.ஜ.க அரசின் ’தூய்மை இந்தியா’ திட்டம் காரணமா ?

வாழைப்பழங்களை விற்க விதிக்கப்பட்ட தடைக்குச் சிறு வியாபாரிகள், விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர். தூய்மை இந்தியா என்ற பெயரில் பாரம்பரிய உணவு வகைகளை அழித்துவிட்டு, நொறுக்குத்தீனிகள் போன்ற தின்பண்டங்களை உட்புகுத்த அரசு முயற்சிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.

banner

Related Stories

Related Stories