இந்தியா

“தினமும் ஆஃபர் தரக்கூடாது” : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு உணவக ஆணையம் கடிதம்!

அதிகப்படியான சலுகைகள் அளிக்கக்கூடாது என ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு தேசிய உணவக ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

“தினமும் ஆஃபர் தரக்கூடாது” : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு உணவக ஆணையம் கடிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ஸொமேட்டோ, ஊபர் ஈட்ஸ், ஃபுட் பாண்டா, ஸ்விக்கி போன்ற ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் அதிகப்படியான தள்ளுபடிகளை வழங்குவதால், தங்கள் வருமானம் பாதிக்கப்படுவதாக உணவகங்கள் புகார் தெரிவித்து வருகின்றன.

இதையடுத்து, அதிகப்படியான சலுகைகள் அளிக்கக்கூடாது என ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு தேசிய உணவக ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. அதில், உணவகங்களிலிருந்து, ஆன்லைன் ஆர்டர் கமிஷன் பிரச்னை, அழுத்தம் உள்ளிட்ட பல புகார்கள் தொடர்ந்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், “தள்ளுபடிகளை எப்போதாவது அல்லது விழாக்காலங்களின் போது வழங்கினால் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், வருடத்தின் எல்லா நாட்களிலும் 30 முதல் 70% வரைதள்ளுபடி வழங்கப்பட வேண்டும் எனக் கூறுவதில் நியாயமில்லை” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசியுள்ள தேசிய உணவு ஆணைய தலைவர் அனுராக் கட்ரியார், “நாங்கள் தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கும் எதிராகச் செயல்படவில்லை. ஆனால், இதைப் பயன்படுத்தி தேவையற்ற மேலாதிக்கம் செலுத்தப்படுவதாலே நாங்கள் தலையிடுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories