இந்தியா

பா.ஜ.க-வின் தவறான பொருளாதார முடிவால் பங்குச்சந்தையில் 15 லட்சம் கோடி இழப்பு : முதலீட்டாளர்கள் அச்சம் !

மோடி அரசின் கூடுதல் வரி விதிப்பின் காரணமாக இந்திய பங்குகளின் மதிப்பு சுமார் 14.7 ட்ரில்லியன் ரூபாய் சரிவை சந்தித்துள்ளது.

பா.ஜ.க-வின் தவறான பொருளாதார முடிவால் பங்குச்சந்தையில் 15 லட்சம் கோடி இழப்பு : முதலீட்டாளர்கள் அச்சம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பா.ஜ.க அரசு இரண்டாவது முறையாக பொறுப்பேற்று நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த ஜூலை 5-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. இதனையடுத்து மத்திய பா.ஜ.க அரசின் பட்ஜெட் அறிவிப்பில் இடம் பெற்றுள்ள சில முக்கிய நடவடிக்கையினால் இந்தியா பெரும் பொருளாதார பிரச்சனையைச் சந்திக்கும் என பொருளாதார வல்லுனர்கள் முன்பே எச்சரித்தனர். ஆனால் அதனைக் காதில் வாங்கி கொள்ளாத மத்திய அரசினால் கடும் பொருளாதார நெருக்கடியை இந்தியா தற்போது சந்தித்து வருகிறது.

குறிப்பாக பட்ஜெட் தாக்கலின் போது, இந்தியாவில் பெரு நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் செய்யும் முதலீடுகளுக்குக் கிடைக்கும் லாபத்தின் மீதும் கூடுதல் வரி விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த வெளியிட்டால் தற்போது முதலீட்டாளர்கள் இந்தியாவில் செய்த முதலீடுகளைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளனர்.

மேலும், பட்ஜெட் அறிவிப்பிற்கு பிறகு கூடுதல் வரி விதிப்பின் காரணமாக மும்பை பங்குச் சந்தை, தேதிய பங்குச் சந்தை, சென்செக்ஸ் மற்றும் நிப்டி போன்ற அனைத்து சந்தைகளிலும் இந்தியா மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பெரிய அளவில் நஷ்டத்தை அடைந்துள்ளனர்.

பா.ஜ.க-வின் தவறான பொருளாதார முடிவால் பங்குச்சந்தையில் 15 லட்சம் கோடி இழப்பு : முதலீட்டாளர்கள் அச்சம் !

அதுமட்டுமின்றி ஆசியச் சந்தைகளில் இந்திய ரூபாய் மதிப்பு தான் மிகவும் மோசமான என்ற நிலையை அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்தியாவில் வெளிநாட்டு முதலீடுகள் குவிய முக்கியக் காரணம் இந்தியாவில் உள்ள தொழில் துறை வளர்ச்சியும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் குறைவு என்பதனால் தான்.

ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியினால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு அதிகரித்துள்ளது. இந்த நடவடிக்கையினால் இந்திய சந்தைகளில் இருந்து சுமார் 22.5 பில்லியன் ரூபாய் தொகை வெளியேறியுள்ளது. இவை அனைத்து 50 நாட்களுக்குள் நடந்துள்ளது.

அன்னிய முதலீடுகள் வெளியேறியதன் விளைவாக ஜூலை 5-ம் முதல் ஆகஸ்ட் 23-ம் தேதி வரையில் இந்திய பங்குகளின் மதிப்பு சுமார் 14.7 ட்ரில்லியன் ரூபாய் சரிவைச் சந்தித்துள்ளது. இந்தச் சரிவிற்கு கூடுதல் வரிவிதிப்பு தான் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

மேலும், இந்த வரி விதிப்பினால் இந்தியாவிற்குக் கிடைத்த வருவாய் என்பது 14 பில்லியன் ரூபாய் தான். ஆனால் இந்திய இழந்துள்ள வருவாயில் 15 ட்ரில்லியன் அளவிற்கு (இந்திய மதிப்பில் சுமார் 15 லட்சம் கோடி ரூபாய்) இழப்பைச் சந்தித்துள்ளது. மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையினால் இத்தகைய வருவாய் இழப்பை இந்தியா சந்தித்து வருவதாக முதலீட்டாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories