இந்தியா

அடுத்தடுத்து சாதனை படைக்கும் சந்திரயான் 2 : விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் பாய்ச்சல் இது !

நிலவுக்கு 4,375 கிலோமீட்டர் தொலைவில் இருந்து சந்திரயான்-2 விண்கலம் எடுத்த புதிய புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நிலவின் தென் துருவப் பகுதியை ஆய்வு செய்வதற்காக கடந்த மாதம் 22ம் தேதி ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது சந்திரயான்-2 விண்கலம்.

பின்னர், ஆக.,2ம் தேதி வரை 4 படிநிலைக்கு உயர்த்தப்பட்ட சந்திரயான் 2, கடந்த ஆக., 4 அன்று பூமியை முதல் முறையாக படம் பிடித்து அனுப்பியது. இதன் பிறகு பூமியின் சுற்றுவட்டப்பாதையில் இருந்து விலகி கடந்த 14ம் தேதி நிலவை நோக்கி தனது பயணத்தைத் தொடங்கியது.

இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி எடுத்த நிலவின் முதல் புகைப்படத்தை வெளியிட்டது இதை தொடர்ந்து ஆக.,23ம் தேதி எடுத்த நிலவின் 2வது புதிய புகைப்படத்தை அனுப்பியுள்ளது. 4 ஆயிரத்து 375 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து சந்திரயான்-2 விண்கலம் எடுத்து அனுப்பி உள்ள புகைப்படத்தை இஸ்ரோ தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

அதில், டெரென் மேப்பிங் 2(டிஎம்சி) என்ற அதி நவீன கேமிராவின் மூலம் நிலவில் உள்ள 71.3 கி.மீ. விட்டமுள்ள ஜாக்சன் என்று பெயரிடப்பட்டுள்ள பள்ளத்தின் படத்தை எடுத்து அனுப்பியுள்ளது சந்திரயான் 2

நிலவை சுற்றி வரும் சந்திரயான்-2 விண்கலம் செப்டம்பர் 7-ம் தேதி நிலவில் தரை இறங்கும். விண்கலத்தின் ஆர்பிட்டர் சந்திரனுக்கு அருகாமையில் சுற்றிவர அதில் இருந்து விக்ரம் லேண்டர் பிரிந்து நிலவின் தென்துருவ பகுதியில் தரை இறங்கும்.

விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் என்ற ரோவர் வாகனம் வெளியே வந்து நிலவின் தரைப்பரப்பில் நகர்ந்து சென்று ஆய்வு மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து சந்திரயான் 2 அனுப்பி வரும் புகைப்படங்களால் சர்வதேச அளவில், இந்தியாவின் மதிப்பு விண்வெளி ஆராய்ச்சித் துறையில் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories