இந்தியா

ஸ்வச் பாரத் என்ன ஆச்சு? : 13 மாநிலங்களுக்கு எச்சரிக்கை - தமிழகத்தின் நிலை என்ன?

கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்களிலிருந்து வெளியேறும் நீரின் தரம் மிகமோசமாக இருப்பதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் 13 மாநிலங்களை எச்சரித்துள்ளது.

ஸ்வச் பாரத் என்ன ஆச்சு? : 13 மாநிலங்களுக்கு எச்சரிக்கை - தமிழகத்தின் நிலை என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களால், சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்படும் நீரின் தரம், மிகவும் மோசமாக இருப்பதாகவும், அதனைச் சரி செய்யும்படியும், தமிழகம் உட்பட 13 மாநிலங்களுக்கு மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

கழிவுநீரை சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்தும் வகையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யும்படி தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், 124 பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து வெளியேறும் நீரின் தரம் மிகவும் மோசமாக உள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் கூறியுள்ளது.

இது தொடர்பாக,13 மாநிலங்களுக்கு தனித்தனியாக கடிதம் அனுப்பியுள்ளது மாசு கட்டுப்பாடு வாரியம். அதில், 'சுத்திகரித்து வெளியிடப்படும் நீரின் தரத்தை உயர்த்தும் வகையில் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என எச்சரித்துள்ளது.

மாசு கட்டுப்பாடு வாரியம் ஆய்வு செய்ததில், மோசமாக உள்ளதாகக் கூறப்படும், 124 பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் 34 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் தமிழகத்தில் உள்ளன. என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories